RSS

Category Archives: சிந்தனை

கனவின் கண்ணாம்பூச்சி

மேலும் பார்க்க »

 
Leave a comment

Posted by on February 24, 2013 in சிந்தனை

 

தேடி தொலைந்தேன்

தேடி தேடி அலைந்தேன்,
தேடியது கிடைக்கவில்லை,
கிடைத்ததை ஏற்கவும் இல்லை,
மீண்டும் தேடினேன்,
நானே தொலைந்தேன்,
இன்று என்னை தேடுகிறேன்,
வாழ்க்கையை மீட்க,
திசை தெரியவில்லை,
ஆனால்,
தேடலுக்கான
பயணம் தொடர்கிறது
நில்லாமல்
நீளமாக……….
 
5 Comments

Posted by on December 27, 2012 in சிந்தனை

 

நீர்த்துளி

நீர் வற்றி போன ஆறுகளும்,
கண்ணீர் வற்றி போன கண்களும் தமிழகத்தில் அதிகம்…
ஆறுகளில் மணல் சுரண்டப்படுகிறது
கண்ணீர் வடித்த மனிதர்களின் இதயம் ரணப்படுகிறது…
ஆறுகள் வறண்டு கிடக்கிறது
விளை நிலங்கள் காய்ந்து போகிறது…
ஆற்றின் குறுக்கே பாலங்கள்
நிலங்களே பாளம் பாளமாக பிளந்து…
ஆறுகள் ஊற்று காணாமல் தவிக்கிறது
விளை நிலங்கள் தண்ணீர் எதிர்பார்த்து
வெடித்து போகிறது,
விவசாயிகளின் உள்ளத்தையும் சேர்த்து

சொட்டு கண்ணீர் மட்டும் பரிசாக

 
1 Comment

Posted by on December 22, 2012 in சிந்தனை

 

நள்ளிரவில் பெண்கள் நடமாட வேண்டாம்…!!

சுதந்திரம் இந்தியாவுக்கு
கிடைத்தது
உண்மையான மனிதர்களுக்கு
கிடைத்ததா?
என்றால் இல்லை.

ஆம்!
சுந்திரம் இருந்ததினால் தான்,
இக்குற்றம்
நடந்தேறியது!

சுதந்திரம்
பெற்றவர்களை பொருத்து
செயல்கள் மாறுகிறது.

காமவெறி பிடித்தவர்களுக்கு
கிடைத்த
சுதந்திரத்தின் பரிசு
ஒரு அபலை பெண் பலி.

இன்று பெண்கள் இரவில்
தனியாக செல்லாதீர்கள்
என்று அறிவுரை.
அறிவுரை தரும்
ஆட்சியாளர்கள் குற்றவாளிகளை
தண்டிக்க திராணி இல்லை.
அப்போ அவர்களுக்கு
கிடைத்ததா சுதந்திரம்……..!

 
1 Comment

Posted by on December 20, 2012 in சிந்தனை

 

100% நிச்சயம்

நினைப்பது அத்தனையும் நடப்பதில்லை,
எண்ணுவது அணைத்தும் செயல்படவில்லை,
உழைப்புகள் அணைத்தும் வெற்றியாவதில்லை,
உணர்வுகள் அணைத்தும் மதிக்கப்படவில்லை,
உறவுகல் அணைத்தும் உண்மையில்லை,

உதட்டில் வெறுமையாக
புன்னகையை உதிர்த்தாலும்,
உண்மை மனதினுள்
பாரமாய் கூடிக்கொண்டே
போகிறது…..

ஓர் நிலையில்
நம்மையும்
அறியாமல்
நட்பிற்காக,
உறவிர்காக,
வேலைக்காக,
நம் கண்களில் கண்ணீர்
துளிகளின் வெளிப்பாட்டை
நிச்சயம் கட்டுப்படுத்தமுடியது…

 
Leave a comment

Posted by on December 15, 2012 in சிந்தனை

 

தளராத மனம் படித்தது

இராமேஸ்வரம் செல்லுகையில், இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் அந்தப் பாட்டியைப் பார்த்தேன். பனை ஓலை விசிறி, பனை ஓலை கிலுகிலுப்பை வேண்டுமா என்று ஒவ்வொரு இரயில் பெட்டியாகத் தேடித் தேடி விற்றுக்கொண்டிருந்தாள்.

சிரித்த முகத்தோடு, பொறுமையாக, குறைந்த விலையில் கலைநயம் மிக்க பொருட்களை விற்று, வாழும் அந்தப் பாட்டி என்னைப் பெரிதும் கவர்ந்தாள். அந்தப் பாட்டியிடம் ஒரு படம் எடுக்கலாமா என்று கேட்டதும் வெட்கம் வந்துவிட்டது. இரண்டு விசிறி பத்து ரூபாய், இரண்டு கிலுகிலுப்பை பத்து ரூபாய்! கிலுகிலுப்பை வைத்து விளையாடும் வயதில் வீட்டில் யாரும் இல்லாதிருந்தபோதும், நாங்கள் கிலுகிலுப்பைகள், விசிறிகள் வாங்கினோம்.

இந்தத் தள்ளாத வயதிலும் உழைத்து உண்ண வேண்டும். வேறு யாரையும் சார்ந்து வாழக் கூடாது என்றிருக்கும் அந்தப் பாட்டியை நாம் அனைவருமே, குறிப்பாக, நம் இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ளலாம்…!

-இன்று ஒரு தகவல் [படித்தது நன்றி செம்மொழி]

என் மனதின் வெளிப்பாடு கீழே. நீங்களும் உங்கள் எண்ணங்களை பதியுங்கள்

ஏழ்மையில் உழைப்பு,
முதுமையில் முயற்சி,
வறுமையில் வாடாமுகம்.
உழைப்பின் அருமை
அறிந்த செயல், தள்ளாடும் வயதிலும்,
தளராத மனம்
கொண்ட
உங்களுக்கு
பணிவான
வணக்கங்கள் தமிழ்த்தாயே

 
1 Comment

Posted by on December 7, 2012 in சிந்தனை

 

முடிவு………………

உண்மையை தேடி,
உண்மையான தேடல்,
உண்மைகளை மறைக்காமல்,
உண்மையாக இருந்து,
உண்மையை கடைப்பிடித்து,
உண்மையோடு வளம்வர எண்ணி,
உண்மையை காணாமல்

மீண்டும் தொடர்கிறது
பயணம்
உண்மையான
முடிவை நோக்கி…

 
1 Comment

Posted by on December 3, 2012 in சிந்தனை

 

தொலைந்து போன தூக்கம்

மேலும் பார்க்க »

 
1 Comment

Posted by on November 25, 2012 in சிந்தனை

 

ஒளியும் இல்லை… ஒலியும் இல்லை

வெடிசத்தத்தில்
மறைந்த
பிஞ்சுகளின்
மௌன அவலம்,

சிவகாசியில் அரங்கேற்றம்…………..
============================

மத்தாப்பூக்களின்
சிதறல்களில்
ஒளியிழந்த
சிசுக்கள்
பாடசாலை மறந்து

கந்தக தொழிற்சாலையில்
============================

கண்கவர்
வானவேடிக்கை வானில்.
செய்தவரின்
வாழ்க்கை
வேடிக்கையாக மாறும்
கொடுமை

சிவகாசியில்
============================

வந்தேறிகள் மட்டுமில்லை
அவர்களின் பண்டிகையும்
தமிழர்களின்
உயிரை
காவு கேட்கிறது

தீபாவளி ஊடாக
============================

உழைப்பிற்கு கூலி
கொடுத்து
ஊக்கப்படியாக
உயிர் காவு
கேட்கிறது

கேட்டால் தீபஒளி திருநாளாம்!!!!!!!

 
2 Comments

Posted by on November 8, 2012 in சிந்தனை

 

அரசியல் தீர்மானம் என்பது

மேலும் பார்க்க »

 
3 Comments

Posted by on November 6, 2012 in சிந்தனை