RSS

Monthly Archives: November 2011

சகோதரி தர்ஷினியின் ஸ்கைப் நிலை

“Its really hard to live without mother”. எனக்கு வருத்தமளித்தது.

அதன் வெளிப்பாடு இது!!!!

அன்பு அம்மா,

கண்ணின் இமைபோல்
என்னை காத்தவளே,
நீயில்லாத என் வானம்
நிலவில்லாத அமாவாசை தான்!!

சோதனைகள் பலவந்தும்
என்னை காத்தவளே,
நீ இல்லாத வாழ்க்கை
எனக்கு சோதனையாச்சே!!

என் கரம் பற்றியே
எங்கும் செல்பவளே,
இன்று என்னை
மட்டும் தவிக்கவிட்டாயே!!

அருகில் நீ இருக்கும்
பொழுது புரிந்துகொள்ளவில்லை,
நீ இல்லாத பொழுது
வாழ்க்கையே புரிந்தது!!

என்னை ஈன்றவளே,
உன் நிழலினும்
பாதுகாப்பு வேறில்லை.

Advertisements
 
4 Comments

Posted by on November 30, 2011 in Uncategorized

 

மின்வெட்டு

தமிழகத்தில் நடக்கும்
ஆட்சி,
விண்ணிலும் நடக்கிறதோ!
அங்கும் மின்வெட்டு.

“அம்மா”வாசை.

 
2 Comments

Posted by on November 29, 2011 in Uncategorized

 

என்னை கவர்ந்த அன்பு தம்பியே..

அன்பு தம்பி,

உடல் நிலையில் சிறு பிரச்சனை
என்று கூறினாய்.
காலில் உள்ள ரணம் சீக்கிரம்
குணமாகிவிடும் என்று கூறினாய்.
ஆனால் இத்தனை நாட்களா?

எல்லா நட்பையும் உதறினாய்.
அந்த வட்டத்தினுள் என்னையும்
இணைத்துவிட்டாயோ??

நிறைய யுத்திகள் கொடுத்து
என்னை சிந்தித்து
பதிவு செய்ய வைத்த தம்பி,
எங்கேயடா மறைந்திருக்கிறாய்?

நாம் செய்த கலந்துரையாடல்கள்
இன்னமும் என் இதயக்கூட்டில் பத்திரமாக
இருக்கிறது.
அதை நீ மறந்துவிட்டாயோ?
அல்லது ஒளிந்துகொண்டாயா??

மனநிறைவோடு முகமலர்ச்சியோடு
அண்ணா அண்ணா என்று
அழைப்பாயே,
என் ஈழத்து இளம்புலியே
எங்கேயடா சென்றாய்.

ஒரு வேலை இதை நீ காண
நேர்ந்தால் ஒரு
மின்னஞ்சலாவது அனுப்புவாய்
என்று நம்பிக்கையுடன் பதிக்கிறேன்.

 
Leave a comment

Posted by on November 29, 2011 in Uncategorized

 

சிறப்பாக திரும்புக

என் முகமரிந்த சகோதரியே,

இணையதள அரட்டையில் சந்தித்தோம்.
நண்பா என்று அழைத்து,
எனக்கில்லை அண்ணன்,
உங்களை அண்ணா என்று
அழைக்கவா என்ற கேள்வி உங்களிடமிருந்து.
சரி இருக்கும் நிறைய சகோதரிகளோடு
நீங்களும் ஒருவர் என்று நினைத்து
பழகினேன்.

நான் தெளிவற்ற நிலையில் இருக்கும் பொழுது
எனக்கு புது சிந்தனைகளை கொடுத்தீர்கள்.

என் பதிப்புக்களை படித்ததோடு
மட்டுமில்லாமல்,
விமர்சனம் செய்து
கருத்துக்கள் கூறி
ஊக்கமும் கொடுத்தீர்கள்.

சகோதரிகள் பலர் என்னிடம் அறிவுரை
கேட்டிருந்த பொழுது,
எனக்கு அறிவுரை கூறி தனித்திருந்தீர்கள்.

பல மாதங்கள் தொடர்பற்று போனது.
மினஞ்சல்களுக்கும் பதிலில்லை.

இன்று திடிரென்று சுவாசிக்க சிரமப்பட்டேன்,
என் வலது மார்பு வலியினால்.
அதை விட மாலை அதிக வலி
உங்களுக்கு சுகவீனம் கேள்விப்பட்டபொழுது.
ஒரு வேலை இது தான் மிகுந்த பாசமோ!

நெஞ்சம் பதபதைதுப்போனது.
துக்கப்பட்டேன்.
இடிந்துபோனேன்.
கண்களும் மெல்லியதாக கலங்கித்தான் போனது.
பேச வார்த்தையில்லாமல் சிறிய மௌனம்.

உங்கள் மனவலிமை,
உங்களை குணப்படுத்தி,
அதே
பழைய பொலிவுடன்,
மனஉறுதியுடனும்,
சிறப்பாக திரும்ப
சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன்

உங்கள் முகமறியா
அன்பு அண்ணன்

 
Leave a comment

Posted by on November 28, 2011 in Uncategorized

 

விதைந்து இருக்கும் வீரம்

இந்த பாடலை எனக்கு பாடி கொடுத்த அன்பு தோழர் “கோகுல்” அவர்களுக்கும், இதை காணொளியாக மாற்றி அருமையாக அதை தொகுத்து கொடுத்த அன்பு தோழர் “சுரேந்தர்” அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்த பாடலின் பாடல் வரிகள், கீழே இருக்கும் இணைப்பில் இருக்கிறது.

http://lkarthikeyan.blogspot.com/2011/11/blog-post_05.html

 
7 Comments

Posted by on November 27, 2011 in Uncategorized

 

தமிழ் தேசத்தலைவரின் 57 வது அகவை சிறப்பு நாள்

 

கனவு மெய் பட வேண்டும்

உள்ளம் குமுருதே, வலியிருக்குதே
நெஞ்சில் தைத்த ரணங்களில்
குருதி வடியுதே.

பதபதைக்குதே, பழி தீர்க்க துடிக்குதே
என் பள்ளிகளின் சுவடு
அழிந்ததே.

மனம் துடிக்குதே, உள்ளம் அழுகுதே
மருத்துவமனையின் மண்ணில்
இரத்தம் தோய்ந்ததே.

பாதை மறைந்ததே, இதயம் கிழீந்ததே
பயின்ற பாசறைகள்
பாழடைந்து போனதே.

குற்றம் பெருகுதே, குழந்தை கதருதே
பெண்களின் கருவும்
கலைக்கப்படுதே.

உடல் சிதைந்ததே, உயிர்கள் பிரிந்ததே
உறவுகள் கண்முன்னே
கலங்கிபோனதே

ஆறாத வடுக்களே, ஆடிய விழுதுகளே
நீரோடும் ஆற்றில் குருதி
கலந்ததே.

கரம் இணையுதே, வலு கூடுதே
தமிழ் மனம் எங்கும்
வீசுதே.

துவண்ட உறவுகளே, ஒளி பிறக்குதே
தமிழீழ தாகம் எங்கும்
பரவுதே.

நெஞ்சு நிமிருதே, உரக்க ஒலிக்குதே
புலிக்கொடி பாரில்
பட்டோளிவீசுதே.

கனவு பலித்ததே, காற்று வீசுதே
சுதந்திர பூமியில் கால்
பதிந்ததே.

 
Leave a comment

Posted by on November 26, 2011 in Uncategorized