RSS

Monthly Archives: March 2012

கூடங்குளம், சேது சமுத்திர திட்டம், இரட்டை வேடமிடும் ஹிந்து அமைப்புகள்

ஹிந்து அமைப்புகள் மற்றும், ஹிந்துத்துவா சார்புடைய அரசியல் கட்சிகள் அனைத்தும், இந்தியாவை பாரத தேசமாகவும், இப்பாரத தேசம் என்பது மிகவும் புனிதமானதாகவும் அவர்கள் எண்ணுகின்றனர்,மற்றும் இப்பாரத தேசமே முழுக்க முழுக்க புராதான சின்னத்தை போன்ற பாதுகாக்க வேண்டிய ஒன்று என்றும், அப்படி செய்ய வேண்டுமென்றால் ஹிந்து மதத்தை காப்பதே அதற்கான சரியான ஒரு வழியாகவும், அவர்கள் எண்ணுகின்றனர், இதன் காரணமாகவே அவர்கள்  பாபர் மசூதி, மற்றும் சேதுக்கால்வாய் சார்ந்த பிரச்சனையில் சற்று விடாப்படியான ஒரு கொள்கையை கடை பிடித்து வருகின்றனர் , இதன் காரணமாக அவர்கள் சேதுக்கால்வாய் திட்டத்தை முடக்கி வைத்திருக்கின்றனர், இதை அவர்களின் உணர்வு பூர்வமான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்வோம், இந்த சேதுக்கால்வாய் நிறைவேற்றும் பட்சத்தில், நாட்டின் முன்னேற்றம்  பன்மடங்கு உயரும், இருந்தாலும் ராமர் கட்டிய பாலத்தை இடித்து வருகிற முன்னேற்றம், அவர்களுக்கு தேவை இல்லையாம், சரி பரவாயில்லை அவர்களின் புராதனத்தின் மீதுள்ள  நம்பிக்கையை விட நாட்டின் முன்னேற்றம் அவர்களுக்கு முக்கியமில்லை, காரணம், நாட்டின் முன்னேற்றம் வேறு வழிகளில் அடைந்து விடலாம், புராதான அடையாளம் போனால் திரும்ப வருமா ? சரி அவர்கள் சொல்வதும் சரியாக உள்ளது போலத்தான  இருக்கு, (அப்படின்னு முடிவு பண்ணிடாதிங்க.)இவ்விடத்தில் இந்த ஹிந்துத்துவா அமைப்புகளின் இரட்டை முகத்தை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும், எதோ ஒரு மூலையில் இருக்கும் மணல் திட்டுக்களை ராமர் கட்டிய பாலமாக புருடா விட்டுக்கொண்டு நாட்டின் வளர்ச்சியில் முட்டுக்கட்டையாக திகழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள், கூடங்குள மக்களின் அணு எதிர்ப்பினால், நாட்டின் வளர்ச்சி கெட்டுவிடும் என கூப்பாடு போடுவது எந்த விதத்தில் நியாயம், ஆதாரமற்ற காரணங்களுக்காக  குறிப்பிட்ட சிலரின் சுய நலனுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் சேதுசமுத்திர திட்டத்தினால் ஏற்படும் இழப்பை விடவா , கூடங்குள அணு மின் நிலையத்தை நிறுத்துவதினால் ஏற்பட்டு விடப்போகிறது, கூடங்குளம் என்பதும், அவர்களின் பாரத தேசம் என்று குறிப்பிடப்படும் பகுதிக்குள்ளே தானே வருகிறது, அப்படியானால் பாரத தேசத்தின் ஒரு பகுதி அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்பால் பரவாயில்லையா, அப்படிப்பார்த்தால், பாரத தேசத்தில் ஒரு சிறு பகுதியில் கிட்ட தட்ட கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பாதிக்கப்படுமே, இவர்களின் கொள்கைப்படி பாரத தேசத்தை பாதுகாக்காமல் இவ்விடத்தில், தேசத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று வருத்தப்படுவதன் காரணமென்ன ? உயிரோடிருக்கும் மக்களையும், அம்மக்களின்  எண்ணத்தையும் பாதுகாப்பதை விட, மணல் திட்டுக்களை பாதுகாப்பதில் இருந்தே இவர்களின் பட்சோந்திதனத்தை பகுத்தறிவாளர்கள் அறியலாம், கூடன்குலத்தை திறந்தே ஆகவேண்டும் என்றும் , இல்லையென்றால் நாட்டின் வளர்சிப்பின்னோக்கி சென்றுவிடும் என்றும், கூப்பாடு போடும் இப்படிப்பட்ட அரசியல் அறிப்பெடுத்தவர்கள் தான், பல மாநிலங்களில் நாட்டின் வளர்ச்சியை கெடுக்கும் கையூட்டுகளை வெற்றிகரமாக நிகழ்திக்கொண்டிருக்கின்றார், இப்படிப்பட்டவர்களுக்கு இம்மி அளவு கூட கூடன்குலத்தின் மக்கள் போராட்டத்தை பற்றி பேச அருகதை அற்றவர்கள்,  இக்கட்டுரையின் நோக்கம் என்பது, போராட்டங்களால், நாட்டின்  வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா ? என்பதாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன், ஆனால்  எதிர்ப்பவர்களின் இரட்டை வேடத்தை வெளியிடுவது அதை விட முக்கியமாக தோன்றியது, அதிலும் குறிப்பாக ஹிந்துத்துவா அமைப்புகளான, ஆர.எஸ்.எஸ், பாரதிய ஜனதா, போன்ற சேது சமுத்திர திட்டத்திற்கு முட்டுக்கட்டையாய் திகழும், மூடர்களை பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டிய கட்டாயம் காரணமாகவே இக்கட்டுரையை எழுதினேன். மற்றொரு குறிப்பு, கூடங்குள அணு உலை முக்கியம் என அதற்கான நியாயங்கலாக, முட்டாள் தனமான நாராயண சாணி போன்றோர் கூறிய புரட்டுகளை யாராவது இங்கு முன்வைப்பீர்கலானால், முதலில் சேது சமுத்திர திட்டத்திற்கு விளக்கத்தை கொடுத்துவிட்டு பேசலாம்.

Advertisements
 

ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

பாடியவர்: சந்திரபாபு

http://www.youtube.com/get_player

ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..
கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..

என்னான்னு தெரியலே, சொன்னாலும் விளங்கலே,
என்னான்னு தெரியலே, சொன்னாலும் விளங்கலே,
என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..

ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

கண்ணான தந்தையை, கண்ணீரில் தள்ளினேன்..
கண்ணான தந்தையை, கண்ணீரில் தள்ளினேன்..
கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்..

பெண்ணாசை வெறியிலே, தன்மானம் தெரியலே,
பெண்ணாசை வெறியிலே, தன்மானம் தெரியலே,
என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..

ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

 
Leave a comment

Posted by on March 10, 2012 in Uncategorized

 

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே

படம்: மணமகன் தேவை
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: சந்திரபாபு
பாடல்: கே.டி. சந்தானம்

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே (2)
தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே(2)

கட்டானி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டானி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை (2)
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

கண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது, என்
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் குடிக்கிறேன் (2)
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

 
Leave a comment

Posted by on March 10, 2012 in Uncategorized

 

குறுக்கெழுத்து போட்டி 2இன் பதில்கள்

குறுக்கெழுத்து போட்டி.

மேலே இருக்கும் குறுக்கெழுத்து போட்டிக்கான பதில்கள் கீழே

இடமிருந்து வலம்
1) உத்திரம்
3) டமாரம்
4) உபரி
10) திபத்
11) கைகாரி

மேலிருந்து கீழ்
1) உடன்படிக்கை
2) திடம்
6) அய்யன்
7) பப்படம்
9) காவலன்
10) திலகம்

வலமிருந்து இடம்
6) அம்மன்
8) புடலங்காய்
12) வித்தகன்
13) வயற்காடு

கீழிருந்து மேல்
5) ரம்
8) புத்திரி
12) வில்

 
Leave a comment

Posted by on March 10, 2012 in Uncategorized

 

இந்த கொடுமை தொடரவேண்டுமா??

http://www.youtube.com/get_player

அனைவரும் இந்த காணொளியை பாருங்கள். மேலும் உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள்.
குறுந்தகவல் மூலமாக மக்களின் பணத்தை சுரண்ட நினைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்தவேண்டும்.

 
4 Comments

Posted by on March 7, 2012 in Uncategorized

 

பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்…….! [படித்தது]

பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்…….!

செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .

பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும் .

வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்

“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “

சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்
ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல்நீடிக்கும்
ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்
பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பை காண
வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளைஎடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி
இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை
வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்

இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல்எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது

பகல் நீட்டிப்பு

வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இரவு நீடிப்பு

கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

நன்றி : தோழர் அ.குரு

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

தமிழ் திங்கள் (மாதம்)
“““““““““““““““`
பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.

அவை:–
1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி)
3. மீனம் (பங்குனி)
4. மேழம் (சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி)
10. துலாம் (ஐப்பசி)
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)

இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

பகிருங்கள். நம்முடைய பெருமையை, குறைந்தது தமிழர்களாவது தெரிந்துகொள்ளட்டும்

 
1 Comment

Posted by on March 1, 2012 in Uncategorized

 

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் – VII

Frustrated = வெறுத்து போ
Irritate = எரிச்சல் உண்டாக்கு
Discouraged = ஊக்கமிழப்பு
Miserable = துயர்மிகுந்த, மகிழ்ச்சியற்ற
Upset = எரிச்சலடை, வருத்தமடை, சலனமடை, வேதனை
Annoy = தொந்தரவான, தொல்லையான, கோபமூட்டு, எரிச்சல் உண்டாக்கு, தொல்லைப்படுத்து, தொந்தரவுகொடு, நச்சரி, திகைக்கவை, குழப்பு, துன்புறுத்து.
Torture = சித்திரவதை, கடுநோவு
Aggressive = அடாவடித் தனமான
Depressed = மனச்சோர்வு
Bore = அலுப்பு, சலிப்பு, சுவாரசியமின்மை, அசுவாரிசியம்.

 
Leave a comment

Posted by on March 1, 2012 in Uncategorized