RSS

Author Archives: Karthik

About Karthik

தமிழினத்தின் வீழ்ச்சியை கண்டு குமுறும் சாதாரண தமிழன். எனக்கு தோன்றியதை மற்றும் படித்ததில் பிடித்ததை இந்த வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்.

என்றோ பழகியது

என்னை நான் மறந்தாலும்
உன் நினைவுகள்
உன்னோடு சேர்த்து
என்னையும்                                                   ஞாபகப்படுத்துகிறது…….
Advertisements
 
3 Comments

Posted by on December 10, 2013 in கவிதைகள்

 

சிந்தனை

எல்லையில்லா
வானத்தில்
ஓய்வடையா
சிறகுகள்

சிந்தனைகள்……!

 
Leave a comment

Posted by on December 6, 2013 in ஹைக்கூ

 

காரணம் நீயோ!!

உள்ளம் படும் பாடு, உணர்ச்சிக்கு தெரியவில்லை…
உணர்ச்சி தந்த வலியால், உள்ளம் தனியாக அழுகிறதே…
 
Leave a comment

Posted by on December 6, 2013 in சிந்தனை

 

ஆழமான உணர்வு

காதல்.

இரு மனங்களின் சங்கமம்
உள்ளம் அனுபவிக்கும் உணர்வு போதை..

வார்த்தைகள் மெளனமாகி
கண்கள் பேசும்
கவிதை

புறக்கண் மூடி
அகக்கண் திறந்து
அன்பை ரசிக்கும்
அழகு….

தோல்வியை மட்டுமே
சந்தித்து
புண்பட்ட மனதை
வருடும் அழகான
தென்றல்…..

அழகை கண்ணால்
பார்க்காமல்
மனதால் பார்த்து,
நேசிக்கப்பட்டும்
நேசித்த
மகிழ்ச்சியின் உச்சம்……

நெருப்பை குளிர் போலவும்
குளிரை தணல் போலவும்
மாற்றும் சக்தி,
இயற்கையையே
ஏமாற வைக்கும்
அதிசயம் கண்களில்
காணும் கணத்தில்…….

உள்ள எண்ணத்தை
கண்ணாடியாக
பிரதிபளிக்கும் உதடுகள்
உதிர்க்கும் வார்த்தைகள்
வேதவாக்காக
மாறி,
கடவுளையும் காதலில்
காட்டும் சித்து விளையாட்டு……..

உடையில் மாற்றம்
நடையில் மாற்றம்
உணவில் மாற்றம்
பேச்சில் மாற்றம்
நடத்தையில் மாற்றம்
ஏன், மதத்திலும் கூட மாற்றம்
அனைத்தையும் கடந்து
மரணத்தையும் மறக்கடித்கிறது,
உள்ளத்தில் நேர்ந்த காதல் மாற்றம்………

கோடிகள் வேண்டாம்
பண்டபாத்திரம் வேண்டாம்
நகைகள் வேண்டாம்
வாகனம் வேண்டாம்
சாதிகள் வேண்டாம், சரி.
மாறாக,
பெற்றோர்கள்
கூட வேண்டாம்
என்று ஒதுக்கும்
காதல் அறிவிலித்தனமும் கூட……….

 
 

பெருந்துயரம்…!

கருப்பு காவல் தெய்வம் இன்று
தான் சுவாசிப்பதை நிறுத்தியது…..

வரலாறு எழுபவர்களின் மத்தியில்,
வரலாற்றை மாற்றியவரின்
அத்தியாயம் முடிந்தது….

கோடிகளில் புரளும் தலைமைகள்
மத்தியில்,
கோடிமக்கள் இதயத்தில்
குடிகொண்ட சுடர்
ஒளியை இழந்தது….

இருளில் இருந்த கறுப்பர்களை,
வெள்ளையனை எதிர்த்து
வெளிச்சத்தை காட்டிய
கலங்கரைவிளக்கம் அணைந்தது……

இருபத்தியைந்து ஆண்டுகள்
சிறையிருட்டில் காலம்
கடத்தி,
சுதந்திர பாதை காட்டி
இன்று உலகை பிரிந்து போனது…

ஓர் இனத்திற்கு
பயணத்தை
துவக்கிக்காட்டியவரின்
பயணம் முடிந்தது…..

கண்முன்னே வாழ்ந்த மகான்,
தன்னை போல வித்தை நிறைய
மனதில் விதைத்த
தன்னலமில்லா போராளிக்கு,
ஒரு தமிழனின்
கண்ணீர் அஞ்சலி…………….

 
3 Comments

Posted by on December 6, 2013 in கவிதைகள்

 

தியாகச்சுடர் அணைந்ததே!!!!!

போராளி நெல்சன் மண்டேலா உயிரிழந்தார். ௨௭ ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த உண்மையான இரும்பு மனிதன், தனது ௯௭ஆம் வயதில் இயற்கை எய்தினார். தென்னாப்ரிக்கா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அன்னாரின் ஆத்மா நிச்சயம் நிம்மதியாக உறங்கும். பிறருக்காக போராடிய இவர் புனிதரே. ஆழ்ந்த அனுதாபங்கள். என்னை போன்ற கருப்பர்களை நிமிர செய்த உத்தமரே, உங்கள் புகழ் இந்த பூமியுள்ள வரை தழைக்கட்டும்…. 😦 😦 😦

http://www.foxnews.com/world/2013/12/05/mandela-dies-age-95/

உண்மையான போராளியே நீ,
உன்னத தியாகி நீ,
தன்னலம் பாராமல் பிறர்
நலத்திற்கு உழைத்தாயே,
வந்த வேலை முடிந்தது
என்று நினைத்தாயோ?
அல்லது விடுதலை வேட்கை
தணிந்தது என்று புறப்பட்டாயா?

உன் மறைவு ஓர் பேரிழப்பு,
பல கோடி கருப்பர்களை (என்னையும்)
தலை நிமிர செய்த தூயவனே,
உன் புகழ் இந்த
பூமி உள்ளவரை அழியாமல்
ஒலிக்கட்டும்

மண்டேலா மண்டேலா மண்டேலா
அன்பிற்கே அன்பை
கற்று தந்த உத்தமனே,
ஓங்குக உன் புகழ்!

தியாகமே,
உண்மையே,
இன்று அகிலமே உன்னை துதிக்கும்.
அழியும்வரை உன் புகழை காக்கும்.

வணக்கங்கள்…….

 
2 Comments

Posted by on December 5, 2013 in செய்திகள்

 

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி [பாடல் வரிகள்]

படம்: பாலைவன சோலை
பாடல்: பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
பாடியவர்: எஸ்.பி.பி
இசை: ஷங்கர் கணேஷ்

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனால்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ மேலே கேட்காதே

பையில் உள்ள எட்டணாவை பத்து முறை எண்ணுவான்
சத்தமின்றி எண்ணுவான் கஞ்சராஜா
பையில் உள்ள எட்டணாவை பத்து முறை எண்ணுவான்
சத்தமின்றி எண்ணுவான் கஞ்சராஜா
தேன்நிலவு போனாலும் தனியாகத்தான் போவானே
உப்பு இல்லை என்றாலும் கண்ணீர் விட்டுக்கொள்வானே

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனால்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ மேலே கேட்காதே

வானொலியில் நாடகத்தில் ஊமை வேடம் போட்டவன்
ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்
வானொலியில் நாடகத்தில் ஊமை வேடம் போட்டவன்
ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்
ராமன் வேடம் போட்டாலும் இரண்டு சீதை கேட்பானே
இரண்டு சீதை இருந்தாலும் சூர்ப்பனகை கேட்ப்பானே

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனால்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ மேலே கேட்காதே

இன்று புது ஆண்டு வந்தது
நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது
இன்று புது ஆண்டு வந்தது
நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது
நாங்கள் பாடும் கீதங்கள்
நாளை உங்கள் வேதங்கள்
நாங்கள் பாடும் கீதங்கள்
நாளை உங்கள் வேதங்கள்
இன்று எங்கள் வாதங்கள் நீங்கள் கேளுங்கள்

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனால்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ மேலே கேட்காதே

 
2 Comments

Posted by on December 5, 2013 in பாடல் வரிகள்