RSS

Monthly Archives: May 2012

முழங்கு இதை மூச்சி இழக்கும் வரை…..


பழந்தமிழாக இருந்தாலும்
என்றும் நீ பைந்தமிழ்!

இனிமையாக பேசும் பொழுது
கரும்பாய் இனிக்கும் தமிழ் நீ !

கூரையின்றி இருந்த பொழுது
தஞ்சமளிக்கும் அடைக்கல தமிழ் நீ!

சுவைக்க சுவைக்க திகட்டாத
அமுத தமிழ் நீ!

கோபப்பட்டு பேசும் பொழுது
ரௌத்திரம் கற்பிக்கும் தமிழ் நீ!

சோகமாக இருந்தபொழுது
தோள் கொடுக்கும் ஆதரவு தமிழ் நீ!

தடை பல வந்தாலும்
உடைத்தெறிந்த காட்டாறு தமிழ் நீ!

வாக்கியத்தில் ஜதி சேர்த்து
வெண்பா பாடும் இசைத்தமிழ் நீ!

கொடுமைகளை கண்டு கொதிக்கும்
உணர்ச்சி தமிழ் நீ!

வறுமையில் வாடிய பொழுது
அமுதூட்டும் வள்ளல் தமிழ் நீ!

அடிமை விலங்கு தகர்த்தெறிய
ஆயுதம் தாங்கிய ஆயுத தமிழ் நீ!

என்னை அடையாளம் காட்டிய
முகவரி தமிழ் நீ!

இவ்வுலகில் பிறந்த அனைத்து
சிசுக்களுக்கும்
அம்மா என்று
மழலையாக
கூற வைத்த அன்னைத்தமிழ் நீ!

வல்லினம்
மெல்லினம்
இடையினம், மூன்றும்
உன்னுள் சுமக்கும்
இலக்கிய தமிழ் நீ!

ஒலியில் பிறந்து
ஒளியாக திகழ்ந்து
எங்களுக்கு
வழி காட்டும் தமிழ் நீ!

நூற்றாண்டுகள் பல கண்டு
தன்னிலை கொண்ட தனித்துவ தமிழ் நீ!

என் தாய் மொழி தமிழ் என்பதில், எனக்கு பெருமை.
என்னை சுமந்த தாய்க்கு உன்னால் பெருமை!
உயிர் மூச்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும்,
அது நின்றாலும் என் கல்லறை உன்னை தாங்கி நிற்கும்!

.

Advertisements
 

தமிழ் வார்த்தைகளை கற்போம், பயன்படுத்துவோம் 8

“tion” என்று முடியும் ஆங்கிலவார்த்தைகளுக்கான தமிழ் எழுத்துக்களை இங்கே பதித்துள்ளேன். படித்து பாருங்கள். உண்மையில் பிடித்திருந்தால், இது தமிழர்களுக்கு பயன் தரும் என்று தோன்றினால் உங்களுடைய நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

Abbreviation = சுருக்கம், ஒடுக்கம்
Absorption = உட்கிரகித்தல், மெய்மறந்த கவனம், அகத்துறிஞ்சல்
Accommodation = தங்குமிடம், விடுதி
Activation = செய்ற்பாடு, செயலூக்கம்
Allocation = ஒதுக்கீடு
Animation = அசைவூட்டம், உற்சாகமூட்டு, உயிரூட்டு
Annotation = உரைவிளக்கம், வியாக்கியானம், குறிப்புரை, விரிவுரை
Anticipation = எதிர்பார்த்தல், முன்னறிவு, முன்செயல், முன்நிகழ்வு, முன்கருதுதல்
Association = சபை, கூட்டமைப்பு, கழகம், சங்கம்
Attraction = ஈர்ப்பு, கவர்ச்சி glamour (வசீகரம்)
Authentication = உறுதிப்படுத்துதல்
Authorization = அதிகாரப்பேறு, அதிகாரப் பத்திரம்
Benediction = ஆசீர்வாதம்
Calculation = கணக்கிடல், கணிப்பு, கணக்கீடு
Calibration = அளவீடு, மதிப்பாராய்தல்
Celebration = கொண்டாட்டம்
Centralization = மையகபடுத்துதல்
Classification = வகைபடுதல், பிரிதல், வகையீடு, தரம் பிரித்தல், பாகுபாடு
collection = வசூல், சேகரிப்பு, தொகுப்பு, திரட்டு, கொத்து
Compensation = இழப்பீடு, ஈடு செய்தல்
Condition = நிபந்தனை, நிலைமை, கட்டுப்பாடு
Congratulation = வாழ்த்து, பாராட்டு
Correction = திருத்தம், சரிசெய்தல்
Creation = படைத்தல், ஆக்கல், உருவாக்குதல்
Deduction = பிடித்தம், கழித்தல், குறைத்தல், கழிவு
Deletion = நீக்குதல்
Derivation = வரையறை, வரைவிலக்கணம், வடித்தம்
Detection = உணர்த்துதல், காணுதல், கண்டுபிடித்தல்
Digestion = செரிமானம், சமிபாடு, உணவு செரித்தல்,
Direction = திசை, இயக்குதல், நெறிப்படுத்தல், வழிமுறை
Disruption = இடிவு, தகர்வு, பிளவு, உடைப்பு
Domination = ஆளுமை, ஆதிக்கம்
Donation = நன்கொடை, வெகுமதி, இனாம்
Duplication = இரட்டுத்தல்
Duration = கால அளவு, வரையறைப்பட்டக்காலம்
Edition = வெளியீடு, பதிப்பு
Elaboration = விரிவுபடுத்துதல், விவரித்தல்
Election = தேர்தல், ஓட்டெடுப்பு
Elevation = ஏற்றம், நிலைத் தோற்றம்
Elimination = தவிர்த்தல், விடுதல், நீக்கம், அகற்றுதல், வெளியேற்றம்
Emotion = ஆவேசம், உணர்ச்சி வேகம், அங்கலாய்ப்பு, மனக்கிளர்ச்சி
Escalation = பரப்புதல், விஸ்தரிப்பு
Exhaustion = முழுச்சோர்வு, கடுஞ்சோர்வு
Expiration = காலாவதி, முடிவடைவு
Explanation = விளக்கம், விளக்கவுரை, பொருளுரை, முன்மொழிவு
Fragmentation = கூறுபடுத்தல், துண்டாக்கல்
Friction = உராய்வு, சச்சரவு, முரண்பாடு, தேய்ப்பு
Function = செயல்கூறு, செயல்படுத்து, செயலாற்று, பண்ணம், நிகழ்ச்சி, விழா
graduation = பட்டப்பேறு, வண்ணத்தின் படிநிலை இழைவு , படியளவுக் குறியீடு , படியளவுக் குறி
Hesitation = வேண்டர வெறுப்பு, தயக்கம், தாமதம்
Illumination = ஒளி விளக்கம், தீபாலங்காரம், பிரகாசம்
Illustration = தெளிவாக்குதல், எடுத்துக்காட்டு, விளக்கப் படம், விளக்கப் படம் , விளக்கப்பட மூலம் விபரித்தல் .
Induction = அறிமுகம், தொடங்கி வைப்பு, தூண்டுதல்
Infection = தொற்று, அழற்சி, பரவுதல்
Inspection = ஆய்வு, பார்வையிடல், பரிசோதனை, கண்காணி
Interruption = தடங்கல், இடைஞ்சல், குறுக்கிடுதல்
Intersection = ஊடறுத்தல், ஊடறுப்பு, குறுக்கீடு
Irrigation = பாசனம், நீர்ப்பாசனம்
Isolation = தனிமை, தனித்திருத்தல்
Junction = இணைப்பு, சந்தி, கூடல், இணைப்பு
Lamination = காப்புறை, மென்தகடு
Liberation = விடுதலை, விடுவிப்பு
Limitation = வரையறை, கட்டுப்படுத்தல், கட்டுப்பாடு
Location = அமைவிடம், இடஅமைவு, இடச் சூழல், சரியான இடம்
Mention = குறிப்பிடுதல், உசாத்துணை
Modulation = அதிர்வு மாற்றமைப்பு
Motion = அசைவு, முயத்தம், முகத்தம், முகட்டம், இயக்கம்
Motivation = உந்துகை, ஊக்கம், தன்முனைப்பாற்றல்
Narration = விவரணம், விவரித்தல், எடுத்துரைத்தல், கதைப்படுத்துதல்
Notation = எண்ணிடல், எண்குறிப்பு, குறியீடு, இலக்கம்
Notification = தெரியப்படுத்தல், அறிவிப்பு, தகவல், அறிவிக்கை
Nutrition = சத்துணவு, ஊட்டச்சத்து, ஊட்டவுணவு, போஷாக்கு
Objection = மறுத்துரைப்பு, எதிர்த்துக் கூறுதல், மறுப்பு, ஆட்சேபனை
Organization = தாபனம், அமைப்பு, உறுகமைப்பு
orientation = தகவல், நடத்தை, செயல், திசையமைவு , திசையமைப்பு
Oscillation = அலைவு, முன்பியல் அலைவு
Partition = பிரிவினை, கூறுகளாகப் பிரித்தல்
Penetration = ஊடுறுவல், பாய்ச்சு, உட்செலுத்து
Perception = மனத்தால் உணர்தல், புரிவு, புலனறிவு, கண்ணோட்டம், உணர்ந்தறிதல்
Petition = வேண்டுகோள், மனு, விண்ணப்பம்
Pollution = தூய்மைக் கேடு, தூய்மை கெடல்
Population = மக்கள் தொகை
Prediction = முன்கூறல், முன் உணர்ந்து சொல்லல், ஊகம்.
Preparation = முன்னேற்பாடு, ஆயத்தம்
Prevention = தடுப்பு
Production = உற்பத்தி, தயாரிப்பு, ஆக்கம்
Prohibition = தடைசெய்தல், தடுத்தல், விலக்கல்
Projection = பிதுக்கம், முந்திட்டம்
Promotion = முன்னேற்றம், உயர்வு, பதவியுயர்வு, தேறுதல், ஆதரித்தல்
Pronunciation = உச்சரிப்பு, ஒலிப்பு
Proportion = விகிதாசாரம், விகிதம்
Protection = பாதுகாப்பு
Publication = வெளியீடு, பதிப்பகம், பிரசுரம்
Punctuation = நிறுத்தக்குறியீடு
Purification = சுத்தப்படுத்து
Radiation = கதிர்வீச்சு, கதிர் இயக்கம், பிரகாசம்
Reception = வரவேற்பு, வரவேற்பறை
Rectification = சீர்/சரி செய்தல், சீர்/சரி படுத்துதல், திருத்தல், தூய்மையாக்கல்
Regulation = வழிமுறை, ஒழுங்குபடுத்துதல், ஒழுங்குவிதி, சீர்ப்பாடு
Reservation = ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு, முன்பதிவுசெய்
Resignation = பதவி விலகல், பணிதுறப்பு
Resolution = தீர்மானம், முடிவு,
Retribution = பழிக்குப்பழி, வஞ்சத்தீர்வு
Revolution = புரட்சி, சுழற்சி, அடிப்படை மாறுபாடு
Rotation = சுழற்சி, சுற்றல், சுழல், சுழல்வு
Satisfaction = மனநிறைவு, திருப்தி
Section = பிரிவு, பகுதி
Selection = தேர்ந்தெடுப்பு, தேர்ந்தெடுக்கப்பெற்றது, முன்தேர்வு, தெரிவு
Sensation = உணர்தல் , புலன்றிவு
Separation = வேறுபடுத்தல், பிரித்து வைத்தல்
Signification = உட்குறிப்பு, உட்பொருள், உட்கருத்து
Solution = கரைசல், தீர்வு
Specialization = சிறப்புத்தேர்ச்சி, முக்கியத்துவம்
Specification = தனிக்குறிப்பீடு, வரியறை
Stabilization = உறுதிநிலைப்பாடு, நிலைபேறுடைமை
Stagnation = தேக்கம்
Station = நிலையம், நிலைத்த, நிலையான, சலனமில்லாத
Subscription = சந்தா
Substitution = பதிலீடு, மாற்றீடு
Suggestion = கருத்து, ஆறிவுரை, யோசனை, கருத்துரை, அலோசனை
Superstition = மூட நம்பிக்கை, மூட பக்தி
Telecommunication = தொலைத்தொடர்பு
Temptation = ஆசை யூட்டுதல், தூண்டி விடுதல், சபலம்
Termination = முடிவுறு, தீர்முனைப்பு, விகுதி, இறுதிநிலை
Tradition = பாரம்பரியம், மரபு, வழமை
Transformation = உருமாற்றம், உருமாறல், தன்மை மாறுதல்
Translation = மொழி பெயர்த்தல், மொழி பெயர்ப்பு
Transportation = கொண்டு செல்லல், அனுப்புதல், எடுத்துச் செல்லுதல், கடத்துதல்
Truncation = முனை சேதிப்பு, உறுப்புக் குறைப்பு
Tuition = தனிப்பயிற்சி, தனிப்படிப்பு, தனிப்போதனை
Underestimation = குறைமதிப்பீடு, தாழ்ந்த மதிப்பீடு
Vacation = விடுமுறைக் காலம், காலிசெய்தல்
Validation = செல்லுபடி சோதனை
variation = மாறுபாடு, வேறுபாடு, பேதம்
Verification = சரிபார்த்தல், ஒப்பாய்வு
Vibration = அதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, நடுக்கம்
Violation = அத்துமீறல், மீறல், மீறுகை

 

கண்ணீரும் வருந்துகிறது!


நீ என்னை பிரிந்த

அந்த நொடியில்,

என் கண்ணீரும்

கண்ணீர் சிந்துகிறது!

 

இன்றைய அரசியலும் , திருக்குறளும். திருக்குறள் அனைத்து காலகட்டத்திலும், அனைத்து மக்களுக்கும், பொருந்தக்கூடிய ஒரு வாழ்வியல் நூல் என்பதை பலர் ஏற்க மறுக்கின்றனர். இன்னும் சிலர், அது எங்களுடையது என உரிமை கொண்டாடுவதில் முனைப்பு காட்டுகின்றனர்! அவர்களில் பெரும்பாலானோர் ஆத்திகர்களாகவே உள்ளனர்; உதாரணத்திற்கு ஹிந்து பார்ப்பனர்கள், வள்ளுவர் பார்ப்பனர் என்றும், அதில் உள்ள அனைத்தும் ஹிந்து கடவுள்களை பற்றிய பாக்களே  என்றும், சமணர்கள் வள்ளுவர் சமணர் என்றும், அதில் கிருத்துவர்கள் ஒரு படி மேலே சென்று, திருவள்ளுவர் கிருத்துவர் என்றும் கூறுகின்றனர். தெருவில் தங்கம் கிடந்தால் அதை சொந்தம் கொண்டாட பரதேசிகள் போட்டிபோடுவது வழக்கம் தானே? இவர்கள் சொந்தம் கொண்டாடினார்களே தவிர திருக்குறளை எந்த இடத்திலும் தாழ்வு படுத்தவில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் என்று ஒரு கூட்டம் உள்ளது. அதில், பாதிக்கும் மேல் உள்ளவர்கள் குறிப்பாக உருது பேசும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்களே! அவர்கள் திருக்குறளில் உள்ளபடிஎல்லாம் மனிதனால் வாழமுடியாது. நபி அவர்கள் காட்டிய வழியில் தான் வாழ முடியும் என்று ஒரே அடியாக திருக்குறளை குப்பையில் தூக்கி போடுகின்றனர். இதில் அவர்கள் எல்லாம் தமிழர்கள் என்பது தான் இங்கு சோகமான செய்தி. 


சரி நாம் கட்டுரையின் கருவிற்கு செல்லலாம்:-

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன ஒரு இலக்கிய நூல் இன்றைய அரசியல் வாதிகளுக்கு ஏற்ற செய்தியை சொல்லுமா ?
இன்றைய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல இன்னும் பலகோடி ஆண்டுகளுக்கு பிறகு வரப்போகும் அரசியல், சமூகம், சுகாதாரம், ஊடகம், அறிவியல், கலை,குடும்பம்,காதல், மனிதர்களின் பயன்பாட்டில்,இன்னும் என்ன என்னவெல்லாம் சமூகத்தில் மனித வாழ்க்கையில் கலந்துள்ளதோ? அத்தனை துறைகள் பற்றியும் திருக்குறள் பேசும். அதற்குத்தானே திருக்குறள் உலகப்பொதுமறை? எல்லா காலகட்டத்திற்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு மறை. ஆனால் நாம் தப்போழுது காலம் கருதி, திருக்குறள் இன்றைய அரசியலுடன் எப்படிப் பொருந்திபோகிறது என்று மட்டும் பார்ப்போம்.

இன்றைய அரசியலுடன் பொருந்தும் திருக்குறள் :

“கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்
அல்லவை செய்தொழுகும் வெந்து.”


இதற்கான பொருள் :


குடிமக்களை வருத்தும் தொழிலை மேற்கொண்டு நீதியல்லாதவற்றைச் செய்து கொண்டிருக்கும் அரசன், கொலை தொழிலை செய்பவனை விட கொடியவன். இப்பொழுது இக்குரல் இன்றைய அரசியலுடன் எப்படி ஒத்துப்போகிறது என்று பார்ப்போம்:-


         ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு, மொத்தத்தமிழகமும் வேதனையில் இருந்தது. பலர் தீக்குளிப்புகளும் செய்தனர்!! ஆனால், தமிழகத்தின் மன்னரான கலைஞரோ! தான் தமிழர்களுக்கு செய்யவேண்டிய நீதி மறந்து, மக்கள் வருந்தும்படியான காரியங்களை செய்தார். இவர், ஈழத்தில் பல லட்சம் கொலைகள் செய்த இராஜபக்க்ஷேவை விட கொடியவர் ஆவார். வள்ளுவரின் அரசியல் புலமையை பார்த்தீர்களா? சரி மேலும் சில குறள்களை பார்ப்போம்.

வேலோடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு.”

அதாவது ஆட்சிக்குரிய செங்கோலைத்தாங்கி நிற்கும் அரசன், மக்களிடம் பொருள் கேட்டால், காட்டுவழியில் வேல் கொண்டு நிற்கும் கள்வன் களவு செய்வதற்கு சமமாகும், என்கிறான் அய்யன் வள்ளுவன், 
இந்த குரலுக்கு நாம் இன்றைய பெட்ரோல் விலை ஏற்றத்தையும், அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றத்தையும் சற்று பார்ப்போம் அதாவது அன்னியசெலாவணி என்று சொல்லப்படுகிற, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வீழ்ச்சி அடைந்து கொண்டே போகிறதாம், இதனால் இந்திய பொருளாதாரத்தை சரி செய்ய இந்த விலை ஏற்றம் என்று ஆளும் மன்னர்கள் சொல்கின்றனர் இத்தனைக்கும் இப்பொழுது கச்சா எண்ணையின் விலை குறைந்திருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் இவர்கள் மக்களிடம் நேரடியாக பணம் கேட்கின்றனர். எனவே இப்படிப்பட்டவர்கள் காட்டில் செல்லும்பொழுது கையில் கத்தியுடன் வழிப்பறி செய்யும் திருடர்கள் என்று அய்யன் சொல்கிறார். இன்று நாமும் அதை தானே சொல்கிறோம்.
அடுத்த குறளை பார்ப்போம்,
“நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.”

அதாவது நாள்தோறும் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஆராய்ந்து, நீதி வழங்காத அரசனின் நாடு நாளுக்கு நாள் கெட்டு வரும்.
இந்த குறளிற்கு ஏற்ற ஒரு களம் என்றால், அதற்கு ராஜீவ் கொலை சம்பவமன்றி வேறெதுவும் இருக்க முடியாது! ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள், உண்மையை ஆராயாமல், நன்மை தீமை அறியாமல் இருந்தாலும் பரவாயில்லை, இவர்களுக்கு நன்றாக தெரியும் ராஜீவ் கொலைக்கு யார் காரணம் என்று! இருந்தும், இவர்கள் சரியான நீதி வழங்காததால் நிரபராதிகள் சிறைக்குள் வாடிக்கொண்டிருப்பதால், இந்தியா என்ற நாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்கள் பலர், இந்தியா என்ற நாடே வேண்டாம்!! தனி தமிழ் தேசத்தை அமைப்போம்!! என்று தமிழ் தேச அரசியலை கையில் எடுத்துள்ளனர். இது இந்தியா என்ற நாட்டிற்கு கேடே அன்றி வேறெதுவுமல்ல.
சரி அடுத்து எந்த குறள் இன்ற அரசியலுடன் பொருந்துகிறது என்று பார்ப்போம்.
“அல்லற்பட்டு ஆற்றாது அழுதக்கண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.”விளக்கம் :
கொடுங்கோல் அரசனால் துன்பப்பட்டுத் தாங்கமுடியாமல் அழுத குடிகளின் கண்ணீர், அவ்வரசனின் செல்வத்தை அழிக்கும் படையாகும் என்கிறான் வள்ளுவன்,


இந்த குறளை ஒத்த மாதரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசை இன்று பெட்ரோல் விலை எற்றத்திர்க்காக விமர்சித்துள்ளார். அது என்னவென்றால், மக்களை இப்படி துன்பப்படுத்தும் மத்திய அரசை, மக்களின் கண்ணீர் அழித்துவிடும் என்பது போல அறிக்கை விட்டுள்ளார். இதில் நகைச்சுவை என்னவென்றால், அம்மக்களின் கண்ணீர் மத்திய அரசை அழிப்பதற்கு முன், அம்மையாரையே முதலில் அழிக்கும். ஏன் என்றால்? அம்மையார் சிலநாட்களுக்கு முன்பு, மின்சாரம், பால், பேருந்து கட்டணம், என்று எல்லா அத்தியாவசிய கட்டணத்தையும் உயர்த்தி, மக்களின் கண்ணீரை குடம் குடமாக குடித்துள்ளார். மேலும் இந்த குறளிற்கு கலைஞரை கூட பயன்படுத்திக்கொள்ளலாம். மக்களின் கண்ணீரை வாங்கிய கலைஞர் கடைசியில் ஆட்சியை பறிகொடுத்த பாவம், சரியாக இந்த குறளிற்கு பொருந்தும்.
இப்படி வள்ளுவர் உலகத்தில் உள்ள அனைவருக்கும், அனைத்திற்கும், அனைத்து காலத்திற்கும் பொருந்தும் குறட்பாக்களை இயற்றியுள்ளார். அதில் இந்த கட்டுரை அரசியலை மட்டும் கூறுவதாகும்! இப்படி தமிழர்களின் அரசியல், அறிவு, ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்த ஒரு தொன்மை அரசியல் அறிவு. ஆனால் நமக்கு அரசியல் செய்ய ஒரு சொந்த நாடு இல்லை. மாற்றானின் அரசியலில், அடிமைகளாய் வாழ்கிறோம். இதற்கு கூட குறள் உண்டு, ஏன் நமக்கு நாமே சொல்லிக்கொள்வானேன்! விடுங்க.
 

கண்ணீர் முத்துக்கள்


உன் பாத
வெண்முத்து சிதறல்கள்,

என் கண்களில்
கண்ணீர் சிதறல்கள்.

அக்கண்ணீரில் கோர்த்த மாலை உன் பாதத்திற்கு அர்ப்பணம்

 

மே-18


தமிழர்களின்
இதயத்தில்
வழிந்தோடும் குருதியாகவும்,
ஆறாத ரணமாகவும்,
என்றும்
நீங்கா துயரம்.
அது கருப்பு நாள் இல்லை!!
தமிழர்களுக்கு சிவப்பு நாள்.

கடல் தாண்டி வந்த
மரண ஓலங்கள்.

உறவுகளின் செங்குருதியினால்
தமிழீழத்தில்
குருதி புனல்.

40,000 உயிர்கள்
விதைக்கப்பட்ட தினம்.

இனவெறி இராஜபக்சே
தமிழர்களின் செங்குருதியிலான
விரிப்பில்
ஆணவமாக சிரித்து நடந்த நாள்.

எங்களின் இதயங்கள் நொறுங்கிய நாள்

 

நெருப்பு


கீழ் நோக்கி
பிடித்தாலும்
மேல் நோக்கியே
எரியும் நெருப்பும்,
ஒரு
உயர்வு மனப்பான்மை
கொண்டது தான்.

கீழ் நோக்கி
பிடித்தாலும்
மேல் நோக்கியே
எரியும் நெருப்பும்,
ஒரு
போராட்ட குணம்
கொண்டது தான்.