RSS

Monthly Archives: April 2011

ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்

அறை முழுவதும் இருள்
இருந்தாலும்,
ஒரு தீக்குச்சி
போதுமே இருளை
அகற்ற…
ஊர் மீது பனி போர்வை
போர்த்தினாலும்
ஒரு சூரியன்
போதுமே பனி
அகலுமே..
நடக்கவே நடக்காது
என்று முட்டுக்கட்டை
போட்டாலும், ஊக்கப்படுத்தும்
ஒரு வார்த்தை போதுமே
முன்னேறி செல்ல!
ஒட்டி கரம் கோர்த்து
நடக்காவிட்டாலும்,
கனவை சிதைக்கும்
வார்த்தைகள் வேண்டாம்!
ஒன்றுபடுவோம்
வென்றெடுப்போம்.

யாரிடமும் மண்டியிடாமல்,
தன்மானம் ஒன்றே மூச்சி,
என்று வாழும் தமிழர்கள்
இணைந்து நம் தேசத்தை
மீட்டெடுக்க வேண்டும்..

 
Leave a comment

Posted by on April 25, 2011 in Uncategorized

 

தமிழ் தேசம்

இது எங்கள் தேசம்…தமிழ் தேசம்!!
ஊழல் இல்லா தேசம் எங்கள்
தமிழ் தேசம்
ஜாதி சண்டையில்லா தேசம் எங்கள்
தமிழ் தேசம்
திருட்டு, கொள்ளை இல்லா தேசம் எங்கள்
தமிழ் தேசம்
அன்பு, நேசம், பாசம், நட்பு, காதல் உள்ள தேசம் எங்கள்
தமிழ் தேசம்
எதிலும் முதலாய் வரும் தேசம் எங்கள்
தமிழ் தேசம்
தமிழன் இல்லா நாடில்லை! தமிழனுக்கு ஒரு தனிநாடில்லை!
இதை தகர்த்தெறியும் தேசம் எங்கள்
தமிழ் தேசம்
வந்தாரை வாழவைத்த தமிழர்களை, ஒன்று சேர்க்கும் தேசம் எங்கள்
தமிழ் தேசம்.
உலக தமிழர்களே, ஒன்று படுவோம்!
வெற்றி பெறுவோம்!
தேசத்தை காப்போம்.
நம் தேசியத்தை வளர்ப்போம்.
வெற்றிபெறுவோம்!
வாழ்க தமிழர்கள்..வளர்க தமிழ் தேசம்!!

 
Leave a comment

Posted by on April 24, 2011 in Uncategorized

 

என் சிந்தனை

மற்றவர்களை நீ எந்த கோணத்தில் (நல்லதோ, கெட்டதோ) பார்க்கிறாயோ அதே கோணத்தில் உன்னையும் சிலர் பார்ப்பார்கள் என்று கவனத்தில் கொள்ளவும்

 
Leave a comment

Posted by on April 12, 2011 in Uncategorized