RSS

Monthly Archives: April 2013

real madrid vs borsussia dortmund semifinal 2nd league (ரியல் மாட்ரிட் vs போருசயா டார்ட்மண்ட் இரண்டாவது அரையிறுதி)

ரியல் மாட்ரிட் மற்றும் போருசியா டார்ட்மண்ட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்று அரையிறுதி போட்டி ரியல்மாட்ரிட் ஆடுகளத்தில் தமிழக நேரம் இன்று may-1-2013 நள்ளிரவு 00:15 மணிக்கு துவங்கியது. சென்ற வாரம் 4-1 என்ற இலக்கு கணக்கில் போருசியா டார்ட்மண்ட் வெற்றி பெற்றதால் இம்முறை எப்படியாவது 3-0 எம்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறிவிடவேண்டும் என்ற முனைப்போடு ரியல் மாட்ரிட் அணி துவங்கியது.

ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் காப்பாளர் கட்டத்தினுள் மிதந்து வந்த பந்தை நெஞ்சில் மீது வாங்கி, பின்னோக்கி கவிழ்ந்து இலக்கினுள் அடித்தார் ரொனால்டோ. ஆனால் டார்ட்மண்ட் காப்பாளர் அருமையாக தடுத்தார்.  

ஆட்டத்தில் 10வது நிமிடத்தில் தனக்கு வழங்கப்பட்ட பந்துடன் காப்பாளர் கட்டத்தினுள் நுழைந்து இலக்கு அடிக்க முனைந்தார் ஹிகுஅயின். ஆனால் டார்ட்மண்டின் காப்பாளர் மிக மிக அருமையாக தடுத்தார்.

15வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ரோனல்டோவுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. இலக்கிற்கு மிக அருகில். ஆனால் அவர் உதித்த பந்து இலக்கினுள் நுழையாமல் வெளியே பறந்து சென்றது.

எப்படியாவது போராடி மூன்று இலக்குகள் அடித்தால் 4-4 (முதல் சுற்று 1-3) என்ற கணக்கில் வந்து எதிரணி களத்தில் ஒரு இலக்கு அடித்த காரணத்திற்காக இறுதி போட்டியினுள் நுழையலாம் என்ற எண்ணத்தோடு சிறப்பான முறையில் ரியல் மாட்ரிட் அணி விளையாடிகொண்டிருந்தது. ஆனால் அவர்களுடைய முயற்சிகளை டார்ட்மண்ட் தடுப்புகள் வீரர்கள் தடுத்துக்கொண்டே இருந்தார்கள். மாட்ரிட் வீரர்கள் பந்தை எடுத்துக்கொண்டு முன்னேறி போவதும் பின் பந்தை டார்ட்மண்ட் வீரர்களிடம் இழப்பதுமாக ஆட்டம் 24 நிமிடங்கள் முடிந்திருந்தது. மிக விறுவிறுப்பாக விளையாடினார்கள் என்றே சொல்லவேண்டும்.

இந்த நேரத்தில் பந்தை மிக நேர்த்தியாக இடது பக்கத்தில் ரியல் மாட்ரிட் அணியின் ஓஸில் எடுத்துவந்து காப்பாளர் கட்டத்தினுள் வழங்கினார். பந்து டிமரியாவிடம் சென்று அவர் இலக்கினுள் அடிக்க முயலும் பொழுது பந்து தன் அணியின் ஹிக்குயன் காலிலேயே பட்டு சென்றது.

சற்று தாமதமாக மாட்ரிட் அணியின் கோன்றாவ் டார்ட்,மண்ட் வீரர் ஹாவர்ட் வெபிடம் போராடிய செயலுக்காக மஞ்சள் அட்டை வழப்பட்டது. டார்ட்மண்ட் வீரர்களும் அவ்வப்பொழுது பந்தை மாட்ரிட்டின் காப்பாளர் கட்டத்தினுள் எடுத்துச்சென்று அவர்களை மிரட்டினார்கள். ஆட்டம் மிகுந்த பரபரப்போடு இருந்ததால் 30 நிமிடங்கள் கடந்ததே தெரியவில்லை.

31வது நிமிடத்தில் டார்ட்மண்ட் அணியினருக்கு கார்னர் கிக் கிடைத்தது. ஆனால் அதை மாட்ரிட் அணியினர் சிறப்பாக முறியடித்தனர். ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் களத்தின் இடது பக்கத்தில் இருந்து ஹிகுஅயின் அடித்த பந்தை ரொனால்டோ தலையில் தட்டி இலக்கினுள் அடிக்க முயன்ற பொழுது காப்பாளர் வேயன்டென்பில்ளீர் முன்னேறி பந்து பிடித்தார்.

42வது நிமிடத்தில் ஓஸிளை கீழே இடறி வீழச்செய்த ஹோண்டகனுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது, மேலும் சற்று தாமதமாக நடுவரிடம் வாதாடியதால் ஹிக்குயனுக்கும் மஞ்சள் அட்டை. 40 யார்டில் ப்ரீ கிக்கின் மூலம் கிடைத்த பந்தை ரொனால்டோ இலக்கை நோக்கி உதைத்தார். ஆனால் அது சற்று அகலாமாகவும் சற்றே உயரமாகவும் வெளியே சென்றது.

முதல் பாதி முடிவடையும் நேரத்தில் டார்ட்மண்ட் வீரர்களின் முயற்சியை மாட்ரிட் காப்பாளர் முன்னேறி வந்து தடுத்தார். இந்த முயற்சியோடு முதல் பாதி பரபரப்போடு நிறைவடைந்தது. மாட்ரிட் அணியின் நிறைய முயற்சிகளை டார்ட்மண்ட் அணியினர் தகர்த்தனர். 
 ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் இடம் வலம் இருபக்கத்தில் கிடைத்த கார்னர் கிக் மூலம் கிடைத்த பந்தை இலக்கினுள் அடிக்கமுடியவில்லை ரியல் மாட்ரிட் அணியினரால். பின்னர் டார்த்மன்டின் வீரர் லேவண்டோவாஸ்கி அவருக்கு கிடைத்த பந்தை இலக்கினுள் அடிக்க தவறினார். அடுத்த நிமிடத்தில் மேலும் ஒரு அருமையான வாய்ப்பு லேவண்டோவாஸ்கிக்கு. அதை அவர் இலக்கினுள் அடிக்க அது இலக்கின் மேல் கம்பியின் உட்ப்புரம் அடித்து வெளியாகியது. இந்த முயற்சி ஆட்டத்தின் சிறந்த முயற்சி. இதை இலக்கினுள் அடித்திருந்தால் கண்டிப்பாக டார்ட்மண்ட் அணி இறுதி போட்டியினுள் நுழைந்திருக்கும்.
டார்ட்மண்ட் அணியினர் தடுப்பாட்டம் ஆடாமல் அவர்களும் இலக்கு அடிக்கும் முயற்சியில் இருந்தார்கள். சிறிது நேரம் கழித்து பென்சமா மற்றும் கக்கா, ஹிக்குயன் மற்றும் கோன்றாவிற்காக முறையே மாற்று வீரர்களாக களம் இறங்கினர்.
61வது நிமிடத்தில் வலது பக்கத்திலிருந்து நுழைந்த டார்ட்மண்ட் அணிவீரர் ரேயுஸ் வழங்கிய குண்டகான் பந்தை இலக்கினுள் அடித்தார். ஆனால் காப்பாளர் லோபஸ் அருமையானக தடுத்தார்.
அடுத்த இரண்டாவது நிமிடத்தில் டார்த்மண்ட் வலது பக்கத்தில் இருந்து மிதந்து வந்த பந்தை லேவண்டோவாஸ்கி தலையால் முட்டி இலக்கினுள் அடிக்க முயற்சி செய்தார், ஆனால் வலது பக்கவாட்டில் அது வெளியே சென்றது.
கக்கா மிகச்சிறப்பான முறையில் பந்தை ரொனால்டோவிற்கு வழங்க அவர் அட்ஜோ டிமரியாவிடம் வழங்க, அவர் அதை இலக்கினுள் அடிக்க முயற்சி செய்தாரா அல்லது பென்சமாவிடம் வழங்கினாரா என்று தெரியவில்லை. அந்த வாய்ப்பு நழுவியது.
அடுத்த இரண்டு நிமிடத்தில் ரொனால்டோவிற்கு அருமையான வாய்ப்பு. இலக்கிற்கு நேரே கிடைத்து அதை இலக்கிற்கு வெளியே அடித்தார்.
அடுத்த நிமிடத்தில் இலக்கிற்கு இடது பக்கத்தில் இருந்து வழங்ககப்பட்ட பந்தை கக்கா வெளியே அடித்தார். தொடர்ந்து வாய்ப்புகள் இழந்து வந்தனர் ரியல் மாட்ரிட் அணியினர். ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்களில் ரியல் மாட்ரிட் அணியினர் 3 இலக்குகள் அடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்கள் மிகவும் விறுவிறுப்பாய் நடந்துகொண்டிருந்தது. 3 இலக்குகள் அடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ரியல் மாட்ரிட் அணியினருக்கு. இந்நேரத்தில் அவர்களுடைய தவறான ஆட்டத்தினால் மஞ்சள் அட்டை ராமோஸ் மற்றும் கெதெறாவுக்கு வழங்கப்பட்டது.
ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியினர் பென்சமா மூலம் ஒரு இலக்கு அடித்தனர். கக்கா வலது பக்கத்தில் வந்த ஓசிளிடம் பந்தை வழங்க அவர் இலக்கிற்கு அருகே அடிக்க அங்கிருந்த பென்சமா இலக்கினுள் அடித்தார். இதன் மூலம் ஆட்டத்தில் 1-0 (2-4) என்ற கணக்கிற்கு வந்தது ரியல் மாட்ரிட் அணி. ரியல் மாட்ரிட் அணியினர் இலக்கு அடிக்கும் முனைப்புடன் மிக மிக அற்புதமாக ஆடினார். பந்தை டார்ட்மண்ட் அணியினருக்கு கொடுக்காமல் தங்களிடமே வைத்திருந்தனர். ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்கள். லேவண்டோவாஸ்கிக்கு மாற்று வீரராக 
இந்நேரத்தில் இடது பக்கத்திலிருந்து கார்னர் கிக் கிடைத்தது ரியல் மாட்ரிட் அணிக்கு. அதில் இலக்குள் அடித்தார். ஆனால் டார்ட்மண்ட் காப்பாளர் தடுத்துவிட்டார். ஆட்டத்தின் கடைசி இரண்டு நிமிடத்த்தில் தனக்கு கிடைத்த பந்தை ராமோஸ் சிறப்பான முறையில் இலக்கினுள் அடித்தார். இதன் மூலம் 2-0 (3-4) என்ற கணக்கில் இருந்தது ரியல் மாட்ரிட். மிக மிக விறுவிறுப்பான கடைசி 10 நிமிடங்கள் என்றே சொல்லவேண்டும். புயல் போல விளையாடினார்கள் ரியல் மாட்ரிட் அணியினர். ரியல் மாட்ரிட் காப்பாளர் லோபஸ் தவிர அணைத்து வீரர்களும் டார்ட்மண்ட் பக்கம் தான் இருந்தனர்.
இன்னமும் ஒரு இலக்கு அடித்தால் இறுதி போட்டியினுள் நுழைந்து விடும் ரியல் மாட்ரிட் அணி. எப்படியும் நுழைய வேண்டும் என்ற முனைப்பு அந்த அணி வீரர்களிடம் இருந்தது. மிக மிக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்கள். 90நிமிடங்கள் தாண்டி ஆட்டம் சென்று கொண்டிருந்தது. 5 நிமிடங்கள் அதிகமாக வழங்கப்பட்டிருந்தது. மிகவும் பதட்டமான நிமிடங்கள் இவை. இந்நேரத்தில் மாட்ரிட் அணியினருக்கு  கார்னர் கிக் கிடைத்தது. காப்பாளர் லோபசும் வந்துவிட்டார் டார்ட்மண்ட் இலக்கினுள். ஆனால் இலக்கிற்கு வெளியே அடிக்கப்பட்டது. ஆட்டம் முடிவடைந்தது. மிக மிக அருமையான, பரபரப்பான ஆட்டம். டார்த்மண்ட் அணி 4-3 என்ற இலக்கு எண்ணிக்கையில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இறுதி போட்டியினுள் நுழைந்தது.
எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும். ஆட்டம் பார்த்துக்கொண்டே வேகமாக தட்டச்சி செய்து, சரி பார்க்க நேரமில்லாமல் பதித்தது.

Advertisements
 
Leave a comment

Posted by on April 30, 2013 in Uncategorized

 

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் [பாடல் வரிகள்]

படம்: பொன் மாலை பொழுது  
இசை: சத்தியா 
பாடகர்: ஹரிஹரன்  

மேலும் பார்க்க »

 
 

கண்ணீர் புள்ளிகள்

ஏங்கிக்கிடக்கும்
பூமி
குளிர
வானம்
அதன்மீது 
வைக்கும்
கண்ணீர் புள்ளிகள்

தூறல்

 
1 Comment

Posted by on April 25, 2013 in ஹைக்கூ

 

சரியா

கீரிடம்
தலைக்கேறும் பொழுது,
தானும் முட்டிமோதி
தலைக்கேற முயலும்……
கீரிடம் மட்டுமல்ல,
நாமும் இடறி வீழ்வோம்
இடம்கொடுக்கும் பட்சத்தில்…
மென்மேலும் வளர
நறுக்கித்தள்ளுவோம்,
கர்வத்தை…………………………………….
 
1 Comment

Posted by on April 25, 2013 in சிந்தனை

 

கால்பந்து விளையாட்டில் இப்படியும் நடக்கிறது

சோரஸ் என்ற உருகுவே நாட்டு கால்பந்து வீரர் தற்பொழுது இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் கால்பந்து கழகத்திற்கு விளையாடி வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள செல்சி எதிராக நடந்த ஆட்டத்தில் பந்தை கடத்தி செல்லும் பொழுது தடுத்த செல்சி வீரர் இவானவோவிக் அவருடைய கையை கடித்து சரிச்சையில் சிக்கினார். இந்த நடத்தையால் அவர் 10 ஆட்டங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது முதல் முறையில்லை, ஏற்கனவே அவர் இதே போன்ற செயலில் ஈடுபட்டு தடை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 
Leave a comment

Posted by on April 25, 2013 in விளையாட்டு

 

Borussia Dortmund vs Real Madrid 2013 [போருசியா டார்ட்மண்டு vs ரியல் மாட்ரிட் சான்பியன்ஸ் கோப்பை இரண்டாவது அரையிறுதி]

ஜெர்மனியின் போருசியா டார்ட்மண்டு மற்றும் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டியின் முதல் சுற்று டார்ட்மண்டுவின் சொந்த மண்ணில் நடந்தது. தமிழக நேரம் 25-Apr-2013 நள்ளிரவு 00:15மணிக்கு துவங்கியது

போருசியா டார்ட்மண்டு அணி ஒரே ஒரு முறை (1997) வாகையர் பட்டத்தை சூடியுள்ளது. இந்த முறை அரையிறுதிக்குள் நுழைய காலிறுதியில் ஸ்பெயின நாட்டின் வேலன்சியா அணியுடன் கடுமையாக போராடி கடைசி நிமிடத்தில் அடித்த ஒரு இலக்கினால் உள்ளே நுழைந்துள்ளது. கண்டிப்பாக பலம் பொருத்திய அதிக முறை வாகையர் பட்டம் சூடியுள்ள ரியல் மாட்ரிட் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால் டார்ட்மண்டு அணி சுமாரான அணி தான். இருந்தாலும் கால்பந்து விளையாட்டில் எதுவும் நடக்கலாம் என்ற எண்ணம் இருந்தது.

ஆட்டம் விறுவிறுப்பாக துவங்கியது. ஆட்டத்தின் துவக்கத்தில் போருசியா டார்ட்மண்டின் ஆட்டம் மேலோங்கி இருந்தது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் அந்த அணியின் லேவண்டோவோஸ்கி அருமையாக இலக்கினுள் பந்தை அடித்து 1-0 என்ற இலக்கு கணக்கில் போருசியா டார்ட்மண்டை முன்னிலை வகிக்க வைத்தார்.

20வது நிமிடத்தில் போருசியா டார்ட்மண்டு இலக்கிற்கு அருகில் மிதந்து வந்த பந்தை ரொனால்டோ தலையில் முட்ட முயற்சி செய்தார். ஆனால் பந்து சற்று உயரமாக சென்றதால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த பந்தை கையில் தடுத்ததால் காப்பாளார் கட்டத்திருக்கு வெளியே தண்டம் கொடுக்கப்பட்டது. அதை நட்ச்சத்திர வீரர் ரொனால்டோ நேர்த்தியான முறையில் இலக்கினுள் அடித்தார். ஆனால் காப்பாளர் வேயடேன்பிளர் சிறப்பான முறையில் தடுத்தார்.  போருசியா டார்ட்மண்டின் பயிற்சியாளர் பெருமூச்சி விட்டார்.

மேலும் 27வது நிமிடத்தில் மேலும் இதே போல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ காப்பாளார் கட்டத்தினுள் அடித்தார். ஆனால் தடுப்புகள வீரர்களால் அது முறியடிக்கப்பட்டது.

அடுத்த இரண்டு நிமிடங்களில் அதே போல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மாட்ரிட் அணியின் அலோன்ஸோ பந்தை காப்பார் கட்டத்திற்கு உள்ளே அடித்தார். காப்பாளர் முன்னே வந்து அதை கையால் முட்டி வெளியே தள்ளி தகர்த்தெரிந்தார்.

ரியல் மாட்ரிட் அணியினரின் முன்னேற்றம் காணமுடிகிறது. மிக மிக அருமையான முறையில் ஆடினார்கள்.  எப்படியும் இலக்கு அடிக்கவேண்டும் என்ற முனைப்பு தெரிந்தது.

ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் போருசியா டார்ட்மண்டின் தடுப்புக்கள வீரர் செய்த பிழையை பயன்படுத்தி ஹிகுயன் பந்தை லாவகமாக கடத்தி சென்றார். அவரை நோக்கி காப்பாளர் செல்ல, அவர் ரோனால்டோவிடம் பந்தை வழங்க அவர் இலக்கினுள் அடித்தார். இதன் மூலம் 1-1 என்று ஆட்டம் சமநிலை அடைந்தது.

முதல் பாதியில் இறுதி நொடிகளில் வழங்கப்பட்ட பந்தை ரொனால்டோ சறுக்கி வந்து இலக்கினுள் அடிக்க முயன்றார். ஆனால் தடுப்புகள வீரர்கள் அதை தகர்த்தனர்.

இத்துடன் முதல் பாதி முடிந்தது. இதன் மூலம் ரியல் மாட்ரிட்க்கு கூடுதல் லாபம் உண்டு. எதிரணி ஆடுகளத்தில் ஒரு இலக்கு அடித்துள்ளனர்.

முதல் பாதியில் சமநிலையில் இருந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதி துவங்கி ஐந்து நிமிடத்தில், இலக்கின் இடப்பக்கத்தில் கிடைத்த கார்னர்கிக் மூலம் மீண்டும் ரேயுஸ் அடித்த பந்தை லேவண்டோவோஸ்கி மீண்டும் ஒரு இலக்கு அடித்தார். இதன் மூலம் 2-1 என்ற இலக்கு கணக்கில் போருசியா டார்ட்மண்டை முன்னிலை வகிக்கித்தது.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ரேயுஸ் கடத்தி சென்ற பந்தை பறிக்கும் முயற்சியில் கஹெதிரா செய்த கடுமையாக தடுப்பில் அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. அடுத்து ஷமேல்சர் அடித்த பந்தை மீண்டும் இலக்கினுள் அடித்து லேவண்டோவோஸ்கி மீண்டும் ஒரு இலக்கு அடித்து 3-1 என்ற இலக்கு கணக்கில் முன்னிலை பெறவைத்தார். 

இதன் இரண்டு இரண்டு இலக்கு முன்னிலை வகித்தது போருசியா டார்ட்மண்டு. சொந்த ஆடுகளத்தில் சிறப்பாக ஆடினாலும் அடுத்த சுற்று ஆட்டம் ரியல் மாட்ரிட் ஆடுகளத்தில் இருக்கும் பட்சத்தில் கடுமையாக போராட வேண்டும் இந்த முன்னிலையை தக்கவைக்க. 

அடுத்த மூன்று நிமிடத்தில் ரியல் மாட்ரிட்டின் மொடேறிக் அடித்த பலமில்லாமல் அடித்த பந்தை காப்பாளர் வேயடேன்பிளர் சிரமம் இல்லாமல் பிடித்தார். 
 லேவண்டோவோஸ்கி அடித்த மூன்றாவது இலக்கு மூலம் ஐரோப்பியா கால்பந்து கழகங்களுக்கு இடையே நடக்கும் ஆட்டங்களில் அதிக இலக்கு அடித்த போலாந்து நாட்டு வீரர் என்ற சாதனை புரிந்தார். ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் வலது பக்கத்தில் இருந்து மிதந்து வந்த பந்தை ரியல் மாட்ரிடின் ஹிகுயேன் இலக்கினுள் அடிக்க முயற்சி செய்தார், மீண்டும் காப்பாளர் பிடித்தார். அப்பொழுது மூன்று ரியல் மாட்ரிட் வீரர்கள் ஆப்சைடில் இருந்தனர். 
ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் ரேயுஸ் மீது ஆலோன்ஸோ காப்பாளர் கட்டத்தின் உள்ளே நடத்திய கடுமையான முயற்சி மூலம் தண்டமாக பெனால்டி வழகப்பட்டது போருசியா டார்ட்மண்டுக்கு. மீண்டும் இலக்கினுள் அடித்து 4 – 1 என்ற கணக்கில் முன்னிலை வைகிக்க வைத்தார் லேவண்டோவோஸ்கி. 
இந்த இலக்கின் மூலம் பத்தாவது முறையாக 4 இலக்குகள் சாம்பியன்ஸ் கோப்பையில் அடிக்கப்பட்டது. அதில் பார்செலோனாவின் லியோனல் மெஸ்சி 2 முறை அடித்துள்ளார். 
ஆட்டத்தின் கடைசி 10 நிமிடத்தில் அல்சொன்ஸோக்கு பதில் கக்கா உள்ளே நுழைந்தார். அவருடைய வரவு ஆட்டத்தில் நிச்சயம் மாறுதல் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ரியல் மாட்ரிடுக்கு கூடதலாக ஒன்றும் நடக்கவில்லை.  இதன் மூலம் இரண்டாவது அரையிறுதி போட்டியில் போருசியா டார்ட்மண்டு 4-1 என்ற கணக்கில் முன்னிலை வைகித்து இறுதி போட்டிக்கு செல்லும் வலிமையாக நிலையில் இருந்தது. 
இரண்டு அரையிறுதி போட்டிகளும் ஸ்பெயின் கால்பந்து கழகங்களுக்கும் ஜெர்மனி கால்பந்து கழகங்களுக்கும் இடையே நடந்தது. அனைத்து கால்பந்து ஆர்வளர்களுக்கும், தொகுப்பாளர்களும் இறுதி போட்டி ஸ்பெயின் நாட்டு கால்பந்து கழகங்களுக்கு இடையே நடக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு ஜெர்மானிய அணிகளும் 4-0 மற்றும் 4-1 என்ற இலக்கு கணக்கில் வெற்றி பெற்று அந்த கணிப்பை தகர்த்தேறின்தனர்.
இறையிருதி போட்டிகளுக்குக்கான இரண்டாவது சுற்று ஸ்பெயின் கால்பந்து கழகங்களின் சொந்த ஆடுகளத்தில் நடக்கவுள்ளது.  
 
Leave a comment

Posted by on April 25, 2013 in விளையாட்டு

 

bayren munich vs barcelona 2013 [பயிரென் முனிக் vs பார்செலோனா 2013 சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டி]

ஐரோப்பா கால்பந்து கால்பந்து கழகங்களுக்கு இடையே 2013 ஆம் ஆண்டின்  சாம்பியன்ஸ் கோப்பைக்கான முதல் அரையிறுதி போட்டி இன்று தமிழக நேரப்படி நள்ளிரவு 00:15 மணிக்கு துவங்கியது . தொடர்ந்து 6 முறையாக அறையிறுதியினுள் நுழைந்து சாதனை படைத்த ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சலொனா அணியும், சென்ற ஆண்டு இறுதியாட்டத்தில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய ஜெர்மனி நாட்டில் உள்ள பயிரென்  முனிக் கால்பந்து கழங்களும் மோதும் இந்த ஆண்டிற்கான அரையிறுதி போட்டி துவங்கியது.

கடந்த 6 ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையில் பார்செலோனா அணியின் விவரம்.

2008 – அரையிறுதி
2009 – வாகையர் பட்டம்
2010 – அரையிறுதி
2011 – வாகையர் பட்டம்
2012 – அரையிறுதி
2013 – ??? (அரையிறுதி)

எந்த ஒரு ஐரோப்பிய கால்பந்து கழகங்களும் இந்த சாதனையை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி நிச்சயம் ஒரு காரணம் என்று உறுதியாக கூறலாம்.

சென்ற முறை சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தில்  தோற்றதினால் இந்த முறை எப்படியும் வாகையர் பட்டம் சூட வேண்டும் என்ற முனைப்போடு பயிரென் முனிக் இதுவரை விளையாடி வருகிறது. முதல் அரையிறுதி போட்டி சொந்த மண்ணில் நடப்பதால் அவர்களுக்கு தங்கள் ரசிகர்களின் ஆதரவு முழு ஊக்கம் தரும்.

மேலும் பார்க்க »

 
Leave a comment

Posted by on April 23, 2013 in விளையாட்டு