RSS

Category Archives: சிந்தனை

காரணம் நீயோ!!

உள்ளம் படும் பாடு, உணர்ச்சிக்கு தெரியவில்லை…
உணர்ச்சி தந்த வலியால், உள்ளம் தனியாக அழுகிறதே…
 
Leave a comment

Posted by on December 6, 2013 in சிந்தனை

 

ஆழமான உணர்வு

காதல்.

இரு மனங்களின் சங்கமம்
உள்ளம் அனுபவிக்கும் உணர்வு போதை..

வார்த்தைகள் மெளனமாகி
கண்கள் பேசும்
கவிதை

புறக்கண் மூடி
அகக்கண் திறந்து
அன்பை ரசிக்கும்
அழகு….

தோல்வியை மட்டுமே
சந்தித்து
புண்பட்ட மனதை
வருடும் அழகான
தென்றல்…..

அழகை கண்ணால்
பார்க்காமல்
மனதால் பார்த்து,
நேசிக்கப்பட்டும்
நேசித்த
மகிழ்ச்சியின் உச்சம்……

நெருப்பை குளிர் போலவும்
குளிரை தணல் போலவும்
மாற்றும் சக்தி,
இயற்கையையே
ஏமாற வைக்கும்
அதிசயம் கண்களில்
காணும் கணத்தில்…….

உள்ள எண்ணத்தை
கண்ணாடியாக
பிரதிபளிக்கும் உதடுகள்
உதிர்க்கும் வார்த்தைகள்
வேதவாக்காக
மாறி,
கடவுளையும் காதலில்
காட்டும் சித்து விளையாட்டு……..

உடையில் மாற்றம்
நடையில் மாற்றம்
உணவில் மாற்றம்
பேச்சில் மாற்றம்
நடத்தையில் மாற்றம்
ஏன், மதத்திலும் கூட மாற்றம்
அனைத்தையும் கடந்து
மரணத்தையும் மறக்கடித்கிறது,
உள்ளத்தில் நேர்ந்த காதல் மாற்றம்………

கோடிகள் வேண்டாம்
பண்டபாத்திரம் வேண்டாம்
நகைகள் வேண்டாம்
வாகனம் வேண்டாம்
சாதிகள் வேண்டாம், சரி.
மாறாக,
பெற்றோர்கள்
கூட வேண்டாம்
என்று ஒதுக்கும்
காதல் அறிவிலித்தனமும் கூட……….

 
 

வாங்க ஐயா வாங்க

பிடித்த நடகரின் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க கால்கடுக்க நின்று நுழைவுச்சீட்டை பதிவு செய்ய நினைக்கும் மனம், ஏனோ நம் நாட்டை ஆள்பவரை தேர்ந்தெடுக்க வரிசையில் நிற்க யோசிக்கிறோம்.

இந்த தேர்தலுக்காவது சீக்கிரம் சென்று உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள். காலதாமதம் ஆனால் உங்கள் வாக்கு உங்களால் பதிவு செய்ய இயலாது.

உங்களுக்கு போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது ௪௯-ஓ (49-0). அதை பயன்படுத்துங்கள்.இது ஒரு அருமையான சட்டம். 

 
1 Comment

Posted by on December 1, 2013 in சிந்தனை

 

முடிவு தெரிகிறது……!

முதுகெலும்பின் அருமை அறியாமல்,
அதை
தேய்மானமடைய வைத்து,
கடைசியில் கூனாகி,
கையேந்தி நிற்கும்
அவலம்,
கண் முன்னே தெரிகிறது…….!!

விவாசாய நிலங்கள்
வீட்டு மனைகளாக
மாறும் பொழுது….!!  

 
4 Comments

Posted by on September 12, 2013 in சிந்தனை

 

அரசியல் சக்கரம் சுழல

சவாரி செய்பவர்கள்
மகிழ்ச்சியாய் பயணம் செய்ய
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு,
வள்ளுவர் சொன்னது
கொடுத்ததை போல மறந்து,
உல்லாசமாய் தொடர்கிறது பயணம்.
 
1 Comment

Posted by on July 4, 2013 in சிந்தனை

 

ஏற்றுக்கொள்வீர்களா??/

சிறிய மனவருத்தம் உள்ளுக்குள் ஊடுருவி,
பனிப்போர் போல் மாறி,
பகையை மெல்ல வளரவைத்து,
காலம் கனிந்து வர காத்திருக்கும்…

சரியான காலத்தில் தன் வேலையை
காண்பிக்கும்
அதுவே துரோகம்…!

 
2 Comments

Posted by on June 27, 2013 in சிந்தனை

 

தேடலில் விடுவு…………………………….

மேலும் பார்க்க »

 
1 Comment

Posted by on June 8, 2013 in சிந்தனை

 

பேசி தீர்ப்போம்……

நம் அன்பிற்கூரியவர்கள்
மௌனிக்கும் பொழுது
நரகத்தில்
நாம் தத்தளிப்பது
போன்று இருக்கும்…
மௌனமும் ஓர்
ஆயுதமே,
என்று அப்பொழுது விளங்கும்……
 
2 Comments

Posted by on June 7, 2013 in சிந்தனை

 

சரியா

கீரிடம்
தலைக்கேறும் பொழுது,
தானும் முட்டிமோதி
தலைக்கேற முயலும்……
கீரிடம் மட்டுமல்ல,
நாமும் இடறி வீழ்வோம்
இடம்கொடுக்கும் பட்சத்தில்…
மென்மேலும் வளர
நறுக்கித்தள்ளுவோம்,
கர்வத்தை…………………………………….
 
1 Comment

Posted by on April 25, 2013 in சிந்தனை

 

வளர்ச்சி

விளங்காததை 
விளக்கமாக 
விளங்கிக்கொள்ள,
விவரமாய் புரிந்துக்கொள்ள,
விரயமாகும் நேரத்தை எண்ணி 
விசும்பாமல்,
விழி திறந்து,
விழிப்புடனும்,
விழாமல் பயணிக்கும் முனைப்புடனும்,
விடாமுயற்சியோடு கற்றால் 
விஸ்வரூப வளர்ச்சி காணலாம்,            வாழ்வில்! 
 
2 Comments

Posted by on March 17, 2013 in சிந்தனை