RSS

Monthly Archives: November 2013

வாக்குறுதி வேண்டும்

கண்ணுறங்க நான்
யோசித்ததில்லை,
தாலாட்டு பாட நீ
இருக்கும் பொழுது
அம்மா!

தவழ்ந்த நான்
தத்தி
நடக்க அஞ்சவில்லை,
கரம் நீட்டி
பிடிக்க நீ
இருக்கும் பொழுது
அம்மா!

உலகை பார்த்து
நான்
வியக்கவில்லை,
நான் பார்த்து
வியந்த உலகம்
நீ தானே அம்மா!

பிறவி அடுத்து
உண்டு எனில்
உடன்பிறப்புகளுக்கு வேண்டாம்
எனக்கே
வரத்தை கொடு
என் கருவில்
நீ பிறப்பாய் என்று!!!!!

 
6 Comments

Posted by on November 30, 2013 in கவிதைகள்

 

விடுதலை விரும்பிகள்

மேலும் பார்க்க »

 
Leave a comment

Posted by on November 28, 2013 in புரட்சி

 

மாவீரர் நாள் ௨௦௧௩ – 2013

மொழியும்
மண்னையும் 
இனத்தையும் காக்க 
தன்னுயிரை,
தாய் மண்ணிற்கு
வித்திட்ட
மாவீரர்களை தன்னுள்
அடக்கிக்கொண்ட
கல்லறைக்கும் வீரமிருக்கும்…

அக்கல்லறைகளை அலங்கரிக்கும்
பூக்களும் பெருமையடையும்!!

வண்ணமான பூக்கள்
மேலே இருக்க,
எதிரிக்கு பூகம்மாய்
திகழ்ந்த வீர உடல்கள்
அமைதியாய்
காலத்தை வென்று
கருவில் விதையாகி
மீண்டும் உயிர்த்தெழும் மாவீரர்கள்

வீர வணக்கங்கள் 
தமிழர்களின் தாகம் சுதந்திர தமிழீழம் 

 
Leave a comment

Posted by on November 27, 2013 in புரட்சி

 

நெஞ்சடச்சி நின்னேனே ஒன்னும் புரியாம [பாடல் வரிகள்]

படம்: விழா
இசை: ஜேம்ஸ் வசந்தன்

நெஞ்சை வருடும் ஒப்பாரி பாடல். கிராமிய குத்து இசையோடு அருமையான பாடல் வரிகள்.

மேலும் பார்க்க »

 
1 Comment

Posted by on November 9, 2013 in பாடல் வரிகள்

 

என்னாச்சோ ஏதாச்சோ மூச்சிபேச்சி [பாடல் வரிகள்]

படம்: விழா
இசை: ஜேம்ஸ் வசந்தன்

தமிழ் மனம் வீசும் கிராமிய பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் கேட்பது மிக அரிதாகி இருக்கும் இக்காலத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த பாடலை விழா என்ற படத்தில் இசையமைத்துள்ளார். இதோ பாடல் வரிகள்

என்னாச்சோ ஏதாச்சோ மூச்சிபேச்சி நின்னு போச்சோ
சொப்பனத்தில் மதிமயங்கி கண்ணுவாய் ஒட்டி போச்சோ
கண்ணாடி கல்லுபட்டா கண்ணு பல நூறு ஆகும்
மவராசா கண்ணுபட்டா மனசு இலவபஞ்சாகும்
கடலு கொதிச்சிதுன்னா விளாவ நீரேது
கண்ணீரு கொதிச்சிதுன்னா கண்ணு முழி தூங்காது

கட்டெறும்பு தோலுருச்சி வக்கீலுக்கு கோட்செஞ்ச சூத்திரரே
சித்தெரும்பு பல்லேடுத்து சிங்கத்தை வேட்டை ஆண்ட தந்திரரே
கையும் காலும் ஓடலையே கண்ணு முழி ஆடலையே
கையும் காலும் ஓடலையே கண்ணு முழி ஆடலையே

 
 

என்ன மாயம் நீ செய்தாய் [பாடல் வரிகள்]

படம்: காதல் சொல்ல ஆசை
பாடலாசிரியர்: தமிழ் சீனு

மேலும் பார்க்க »

 
 

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே [பாடல் வரிகள்]

படம்: என்றென்றும் புன்னகை
பாடல்: என்னை சாய்த்தாளே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: கவிதாயினி தாமரை
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரியா கோஷல்

மேலும் பார்க்க »