RSS

Monthly Archives: June 2013

வரம்

கரம் பிடித்த நாளில் உனை பிரிந்த சோகம்,
கை கோர்த்த பொழுதினில் விரல்கள் பிரிந்த தாக்கம்,
உன் கண்கள் எனை நோக்கி பாடிய கீதம்.
இன்றும் கலக்கத்தில் என் நெஞ்சம்.
உன்னை பிரிந்திருக்கும் தூரம்,
மனதில் என்றும் உன் உருவம்,
நீ அழைப்பாய் என்றெண்ணும் தருணம்,
உடனே அலைபேசி சிணுங்கும் நேரம்,
நீ தான் என்று என்னுள்ளம் எண்ணும் தருணம்,
“ஹலோ” என்று உன் குரலின் சப்தம்,
அக்கணமே எனக்குள் ஒரு நிசப்தம்

கண்விழித்தே நான் சென்றேன் கனவுலகம்
இதுதானோ நான் வாங்கிவந்த வரம்

இப்படிக்கு,
நாட்டை கடந்து வந்த உன் கணவன்

Advertisements
 
1 Comment

Posted by on June 28, 2013 in கவிதைகள்

 

ஏற்றுக்கொள்வீர்களா??/

சிறிய மனவருத்தம் உள்ளுக்குள் ஊடுருவி,
பனிப்போர் போல் மாறி,
பகையை மெல்ல வளரவைத்து,
காலம் கனிந்து வர காத்திருக்கும்…

சரியான காலத்தில் தன் வேலையை
காண்பிக்கும்
அதுவே துரோகம்…!

 
2 Comments

Posted by on June 27, 2013 in சிந்தனை

 

வலிகளில் வழிகள்

மேலும் பார்க்க »

 
2 Comments

Posted by on June 25, 2013 in கவிதைகள்

 

அருவாக்காரன் அழகன் பேரன் பாடல் வரிகள்

படம்: குட்டி புலி
பாடல்: அருவாக்காரன் அழகன் பேரன்
இசை: எம்.ஜிப்ரான்
பாடலாசிரியர்: வைரமுத்து

அருவாக்காரன் அழகன் பேரன்
அடிநெஞ்ச தேச்சு போனான் தாடிக்காரன்
ஆந்தக் கண்ணன் அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசக்காரன்
எரை வைத்து சிக்காத பறவ போல
என் கையில் சிக்கலயே எளையன் காள
ஓடும் நீரில் காணும் கரையும்
கூட வாரேன் நிழல போல

அருவாக்காரன் அழகன் பேரன்
அடிநெஞ்ச தேச்சு போனான் தாடிக்காரன்
ஆந்தக் கண்ணன் அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசக்காரன்

கிறு கிறு கிறு கிறுவென வருகுது
ஒரு கீழ் பார்வை பார்கையில
விறு விறு விறு விறுவென உருகுது
மனம் வெரச நீ போகையில
போகுதே உயிர் பாதியில
போ போ போகுதே உயிர் பாதியில

வெட வெட வெட வென விறு விறுவென
மேல் காத்து வீசையில
மட மட மட மட மனசறியுது
ஒரு மாராப்பு ஆசையில
பூக்கவா உன் சாலையில
தங்கம் நான் என்ன தேய்க்க வா
தாலியில் கட்டி மேய்க்க வா
வீங்கும் நெஞ்ச வாங்கிக் கொள்ள
வா டா வா டா

அருவாக்காரன் அழகன் பேரன்
அடிநெஞ்ச தேச்சு போனான் தாடிக்காரன்
ஆந்தக் கண்ணன் அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசக்காரன்

பட படவென பொலம்புது பொண்ணு
பனங்காட்டு மழையாக
நழுவுது ஒதுங்குது பனங்குது மனம்
நரி கண்ட நாடாக
ஓடுதே உயிர் நூறாக
கண்ணு முழி கெரங்குது மயங்குது
சிறு கண்ணாறு நீராக
கல கலவென ஒரு சொல் சொல்லு
யார் பாக்க போறாங்க
தேயுதே உடல் நாராக
தே தே தேயுதே உடல் நாராக
கோணலாய் மனம் ஆனதே
நாணலாய் அது சாயுதே
அண்ணாக் கயிறில் தாலி கட்ட
வா டா வா டா

அருவாக்காரன் அழகன் பேரன்
அடிநெஞ்ச தேச்சு போனான் தாடிக்காரன்
ஆந்தக் கண்ணன் அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆசை வைக்கும் மீசக்காரன்
எரை வைத்து சிக்காத பறவ போல
என் கையில் சிக்கலயே எளையன் காள
ஓடும் நீரில் காணும் கரையும்
கூட வாரேன் நிழல போல

 

தேடலில் விடுவு…………………………….

மேலும் பார்க்க »

 
1 Comment

Posted by on June 8, 2013 in சிந்தனை

 

பேசி தீர்ப்போம்……

நம் அன்பிற்கூரியவர்கள்
மௌனிக்கும் பொழுது
நரகத்தில்
நாம் தத்தளிப்பது
போன்று இருக்கும்…
மௌனமும் ஓர்
ஆயுதமே,
என்று அப்பொழுது விளங்கும்……
 
2 Comments

Posted by on June 7, 2013 in சிந்தனை

 

அனைத்தையும் இழப்பேன் உனக்காக அன்னையே…………..

கடல் தாண்டி வந்தேன்
பொருள் சேர்க்க விரைந்தேன்
பெற்றோரை பார்க்காமல் தவித்தேன்
அவர்கள் கண்முன் இல்லாமல் அழுதேன்

கண்ணீரின் கேள்வி இதுவே
தனிமையில் ஏது வாழ்வே?

நண்பனின் குரலை மறந்தேன்,
அவன் பெயரை நாளும் நினைத்தேன்….
சொந்தங்களின் உருவம் மனதில்,
பணத்தால் தொலைத்தேன் இளவயதில்….

நாடு இருக்கும் திசை நோக்கியே
கணத்த மனதோடு
சோக முகத்தோடு
வாடிய உள்ளத்தோடு
கலங்கிய கண்ணோடு
நின்றிருந்தேன்…..

பணத்தை திட்டிக்கொண்டு
தொலைத்த இளமையை எண்ணிக்கொண்டு
புதிதாய் வாங்கிய அலைபேசியோடு
அம்மாவின் குரல் கேட்க்கும்
ஆவலோடு
அழைப்பு கொடுத்தேன்.

என்னுடைய இந்த வயதிலும்
அன்னையின் குரல்
தாலாட்டாய் என்னை
மகிழ்விக்கும் பொழுது
இழந்ததை பற்றிய
எண்ணம் காற்றோடு கரைந்தே போனது………………………..

 
4 Comments

Posted by on June 6, 2013 in கவிதைகள்