RSS

Monthly Archives: April 2012

தூக்கம்

கண்விழிக்கும் நேரத்தை

எண்ணி

இரவில் தொலைப்பது!

Advertisements
 
Leave a comment

Posted by on April 30, 2012 in Uncategorized

 

நீங்கா நினைவுகள்

உன்னுடன்

கண்ணாம்பூச்சி ஆடிய இரவுகள்,
கூட்டாஞ்சோறு சமைத்த பகல்கள்,
கைகோர்த்து நடந்த மாலை நேரங்கள்,
மிதிவண்டி கற்றுக்கொண்ட பொழுதுகள்,
மணல்வீடு கட்டிய கடற்கரைகள்,
ஒன்றாக படித்து ஒப்பித்த காலை விடியல்கள்,
பக்கத்து வீட்டு தொலைக்காட்சி பொழுதுபோக்குகள்,
பரிமாறிக்கொண்ட உணவு சுவைகள்,
காய்ச்சலில் படுத்த துயர நாட்கள்,

இவையனைத்தும்
கற்பனைக்கு எட்டாத நிஜங்கள்,
என்றும் நீங்கா நினைவுகள்!

 
Leave a comment

Posted by on April 29, 2012 in Uncategorized

 

இசை ஞானத்தை பகிருங்கள்……


இணையத்தில்
இனிய குயிலோசை போல்
இசையமுதூட்டும்
இனியத்தமிழோசையில்
இணைந்து, கலந்த
இன்னிசை சிதறல்கள்.
இவை
இனிமையான
இசை மாலைகள்!

முகநூல் குழுமத்திற்கு செல்ல இங்கே சொடுக்குங்கள்

அரட்டையரை செல்ல இங்கே சொடுக்குங்கள்

 
Leave a comment

Posted by on April 29, 2012 in Uncategorized

 

சேகுவாராவின் இறப்புக்கு பின் அவரின் உடலைகானும் அவரின் காதலி வருத்தம்முடன் கையில் கைகுழந்தையுடன் மீண்டும் மக்களை புரட்சி பாதைக்கு அழைக்கும் விதமாக அமைக்கப்பட்ட இப் பாடல் இன்று வரை உலக அளவில் பலரது பாராட்டையும்,புகழையும் பெற்றது.

 

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் – 8

பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ் : வணிக மையம்

2 கார்ப்பரேஷன் : நிறுவனம்

3 ஏஜென்சி : முகவாண்மை

4 சென்டர் : மையம், நிலையம்

5 எம்போரியம் : விற்பனையகம்

6 ஸ்டோரஸ் : பண்டகசாலை

7 ஷாப் : கடை, அங்காடி

8 அண்கோ : குழுமம்

9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி

10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி

11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்

12 டிராவலஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்

13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை

14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்

15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை

16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்

17 டிம்பரஸ் : மரக்கடை

18 பிரிண்டரஸ் : அச்சகம்

19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்

20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்

21 லித்தோஸ் : வண்ண அச்சகம்

22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்

23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்

24 காபி பார் : குளம்பிக் கடை

25 ஹோட்டல் : உணவகம்

26 டெய்லரஸ் ; தையலகம்

27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்

28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்

29 சினிமா தியேட்டர் : திரையகம்

30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்

31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்

32 சிட் பண்ட் : நிதியகம்

33 பேங்க் : வைப்பகம்

34 லாண்டரி : வெளுப்பகம்

35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்

36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்

37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி

38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி

39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்

40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்

41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்

42 ஆட்டோ : தானி

43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்

44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்

45 பேக்கரி : அடுமனை

46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்

47 பசார் : கடைத்தெரு, அங்காடி

48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்

49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை

50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி

51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி

52 பாய்லர் : கொதிகலன்

53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்

54 கேபிள் : கம்பிவடம், வடம்

55 கேபஸ் : வாடகை வண்டி

56 கபே : அருந்தகம், உணவகம்

57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்

58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை

59 சிமெண்ட் : பைஞ்சுதை

60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்

61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி

62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி

63 கிளினிக் : மருத்துவ விடுதி

64 காபி ஹவுஸ் : குளம்பியகம்

65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,

66 கம்பெனி : குழுமம், நிறுவனம்

67 காம்ப்ளகஸ் : வளாகம்

68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்

69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி

70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்

71 கூரியர் : துதஞ்சல்

72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்

73 சைக்கிள் : மிதிவண்டி

74 டிப்போ : கிடங்கு, பணிமனை

75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்

76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்

77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்

78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்

79 எம்போரியம் : விற்பனையகம்

80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்

81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்

82 பேக்டரி : தொழிலகம்

83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்

84 பாஸ்ட் புட் : விரை உணா

85 பேகஸ் : தொலை எழுதி

86 பைனானஸ் : நிதியகம்

87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி

88 கார்மென்டஸ் : உடைவகை

89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்

90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை

91 ஜூவல்லரி : நகை மாளிகை

92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்

93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி

94 மார்க்கெட் : சந்தை அங்காடி

95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்

96 பேஜர் : விளிப்பான், அகவி

97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு

98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்

99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு

100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்

101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்

102 பார்மசி : மருந்தகம்

103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்


104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்

106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை

107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்

108 பவர்லும் : விசைத்தறி

109 பவர் பிரஸ் : மின் அச்சகம்

110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்

111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்

112 ரப்பர் : தொய்வை

113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்

114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்

115 ஷோரூம் : காட்சிக்கூடம்

116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை

117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்

118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்

119 சப்ளையரஸ் : வங்குநர்

120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்

121 டிரேட் : வணிகம் 122 டிரேடரஸ் : வணிகர்

123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்

124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்

125 டீ ஸ்டால் : தேனீரகம்

126 வீடியோ : வாரொளியம், காணொளி

127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு

128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்

129 எக்ஸ்ரே : ஊடுகதிர்

 
2 Comments

Posted by on April 24, 2012 in Uncategorized

 

இந்தியாவின் தீவிரவாதம் காந்திய நிழலில் மறைக்கப்படுகிறது.

 

கம்யுனிஸ்ட்களும் தமிழின விரோதிகளே.