RSS

Monthly Archives: December 2012

அன்பு அறியா பருவம்

தாய்மை
அர்த்தம் விளங்கவில்லை…..
அறியாத பருவத்தில்
அனைத்தும் தாய்மையே,
அன்பு
உள்ளத்தின் ஆழத்திலிருந்து
வெளியாகும் வரை…..!
என் அன்னையும் உன்னை
போலவே.
என்னை அன்போடு
காப்பாள்…..!
பொருமை தாய்மை.
ஊக்கம் தாய்மை,
பாசம் தாய்மை,
பரிவு தாய்மை,
கருனை தாய்மை,
இன்று
தாய்மை என்னுள்!
உன் பிள்ளையை கண்டு
நானும் மகிழ்கிறேன்,
ஒரு தாயாக நான்…………!!!!!

Advertisements
 
2 Comments

Posted by on December 31, 2012 in கவிதைகள்

 

புத்தாண்டே வருக

புதுமையாக நீ இருப்பாய்
என்று நம்பி
புத்தாண்டு என்கிறோம்,
நித்தமும் 24 மணி நேரம்
என்பதை
மறந்துவிட்டு……!

ஒவ்வொரு வருடமும்
பிறக்க தான் செய்கிறது

இந்த ஆண்டாவது
சிறப்பாக எதுவும் நடக்காதா
என்று
ஏங்கும் முதிர் கன்னிகள்
ஆசையோடு பார்த்திருக்கின்றார்கள்
வரதட்சணை ஒழிய…!

கடந்த ஆண்டுகள்
பரிசாய் தந்து சென்ற
இருள் அரக்கனை
மீட்கும் இரட்சகனாய்
தமிழகம்
எதிர்பார்க்கிறது…!

அணு அலைகளை
வாரி இறைத்து,
தமிழர்களுக்கு
உலை வைக்கும்
அணு உலைகளை
மூடி மகிழ்விப்பாய்
என்று நம்புகிறோம்

காடுகள் அழிகிறது… விளை நிலங்கள் கருகிறது… ஆறுகள் காய்கிறது… ஏறிகள் வற்றுகிறது…
2013னே
பழைய பஞ்சாங்க ஆண்டுகளாய்
இல்லாமல்
ஒளியூட்டும்
நல்லாண்டாய் மலர்ந்து
எங்கள்
வாழ்வை உயர்த்த
உன்னை
பாசத்தோடு வரவேற்கிறோம்
புத்தாண்டே வருக,
புது உலகம் தருக…………

 
Leave a comment

Posted by on December 27, 2012 in கவிதைகள்

 

தேடி தொலைந்தேன்

தேடி தேடி அலைந்தேன்,
தேடியது கிடைக்கவில்லை,
கிடைத்ததை ஏற்கவும் இல்லை,
மீண்டும் தேடினேன்,
நானே தொலைந்தேன்,
இன்று என்னை தேடுகிறேன்,
வாழ்க்கையை மீட்க,
திசை தெரியவில்லை,
ஆனால்,
தேடலுக்கான
பயணம் தொடர்கிறது
நில்லாமல்
நீளமாக……….
 
5 Comments

Posted by on December 27, 2012 in சிந்தனை

 

நீர்த்துளி

நீர் வற்றி போன ஆறுகளும்,
கண்ணீர் வற்றி போன கண்களும் தமிழகத்தில் அதிகம்…
ஆறுகளில் மணல் சுரண்டப்படுகிறது
கண்ணீர் வடித்த மனிதர்களின் இதயம் ரணப்படுகிறது…
ஆறுகள் வறண்டு கிடக்கிறது
விளை நிலங்கள் காய்ந்து போகிறது…
ஆற்றின் குறுக்கே பாலங்கள்
நிலங்களே பாளம் பாளமாக பிளந்து…
ஆறுகள் ஊற்று காணாமல் தவிக்கிறது
விளை நிலங்கள் தண்ணீர் எதிர்பார்த்து
வெடித்து போகிறது,
விவசாயிகளின் உள்ளத்தையும் சேர்த்து

சொட்டு கண்ணீர் மட்டும் பரிசாக

 
1 Comment

Posted by on December 22, 2012 in சிந்தனை

 

குறியீடுகளின் தமிழ் பெயர் தெரியுமா [படித்தது]

குறியீடுகளின் தமிழ் பெயர் தெரியுமா தெரிஞ்சுக்கோங்க.

தனி மேற்கோள் குறி ( ’ ‘ )
அடைப்புக் குறிகள் ( [ ], ( ), { }, ⟨ ⟩ )

முக்காற்புள்ளி ( : )

காற்புள்ளி ( , )
இணைப்புக்கோடு ( ‒, –, —, ― )
முப்புள்ளி ( …, …, . . . )
உணர்ச்சிக்குறி ( ! )
முற்றுப்புள்ளி ( . )
கில்லெமெட்டு ( « » )
இணைப்புச் சிறு கோடு ( ‐ )
கழித்தல் குறி ( – )
கேள்விக்குறி ( ? ) மேற்கோட்குறிகள் ( ‘ ’, “ ”, ‘ ‘, ” ” )
அரைப்புள்ளி ( ; )
சாய்கோடு ( /, ⁄ )

சொற்பிரிப்புகள்
வெளி ( ) () ()
மையப் புள்ளி ( · )

பொது அச்சுக்கலை
உம்மைக் குறி ( & )
வீதக் குறி ( @ )
உடுக்குறி ( * )
இடம் சாய்கோடு ( \ )
பொட்டு ( • )
கூரைக் குறி ( ^ )
கூரச்சுக் குறி ( †, ‡ )
பாகைக் குறி ( ° )
மேற்படிக்குறி ( 〃 )
தலைகீழ் உணர்ச்சிக் குறி ( ¡ )
தலைகீழ் கேள்விக் குறி ( ¿ )
எண் குறியீடு ( # )
இலக்கக் குறியீடு ( № )
வகுத்தல் குறி ( ÷ )
வரிசையெண் காட்டி ( º, ª )
விழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு ( %, ‰, ‱ )
பத்திக் குறியீடு ( ¶ )
அளவுக் குறி ( ′, ″, ‴ )
பிரிவுக் குறி ( § )
தலை பெய் குறி ( ~ )
அடிக்கோடு ( _ )
குத்துக் கோடு ( ¦, | )

அறிவுசார் சொத்துரிமை
பதிப்புரிமைக் குறி ( © )
பதிவு செய்யப்பட்ட வணிகக் குறி ( ® )
ஒலிப் பதிவுப் பதிப்புரிமை ( ℗ )
சேவைக் குறி ( ℠ )
வர்த்தகச் சின்னம் ( ™ )
Currency
நாணயம் (பொது) ( ¤ )
நாணயம் (குறிப்பிட்ட)
( ₳ ฿ ₵ ¢ ₡ ₢ ₠ $ ₫ ৳ ₯ € ƒ ₣ ₲ ₴ ₭ ℳ ₥ ₦ ₧ ₱ ₰ £ ₹ ₨ ₪ ₸ ₮ ₩ ¥ ៛ )

பிரபல்யமற்ற அச்சுக்கலை
மூவிண்மீன் குறி ( ⁂ )
டி குறி ( ⊤ )
செங்குத்துக் குறியீடு ( ⊥ )
சுட்டுக் குறி ( ☞ )
ஆகவே குறி ( ∴ )
ஆனால் குறி ( ∵ )
கேள்வி-வியப்புக் குறி ( ‽ )
வஞ்சப்புகழ்ச்சிக் குறி ( ؟ )
வைர வடிவம் ( ◊ )
உசாத்துணைக் குறி ( ※ )
மேல்வளைவுக் குறி ( ⁀ )

 
Leave a comment

Posted by on December 21, 2012 in தமிழ்

 

நள்ளிரவில் பெண்கள் நடமாட வேண்டாம்…!!

சுதந்திரம் இந்தியாவுக்கு
கிடைத்தது
உண்மையான மனிதர்களுக்கு
கிடைத்ததா?
என்றால் இல்லை.

ஆம்!
சுந்திரம் இருந்ததினால் தான்,
இக்குற்றம்
நடந்தேறியது!

சுதந்திரம்
பெற்றவர்களை பொருத்து
செயல்கள் மாறுகிறது.

காமவெறி பிடித்தவர்களுக்கு
கிடைத்த
சுதந்திரத்தின் பரிசு
ஒரு அபலை பெண் பலி.

இன்று பெண்கள் இரவில்
தனியாக செல்லாதீர்கள்
என்று அறிவுரை.
அறிவுரை தரும்
ஆட்சியாளர்கள் குற்றவாளிகளை
தண்டிக்க திராணி இல்லை.
அப்போ அவர்களுக்கு
கிடைத்ததா சுதந்திரம்……..!

 
1 Comment

Posted by on December 20, 2012 in சிந்தனை

 

14 வயது தமிழ் மாணவனின் துணிச்சல்

லண்டனில் சிங்கக் கொடியை பள்ளிக்கூடத்தில் இருந்து அகற்றிய 14 வயது மாணவன் !

லண்டனில் பல தமிழர்கள் கொல்லப்பட்ட மக்களுக்காக போராடி வருகின்றனர். இதேவேளை லண்டனில் போராடினால் எமக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது ? வெள்ளைக்காரனிடம் எமது போராட்டத்தை கொண்டு சேன்று சேர்க்க முடியாது என்று எல்லாம் பேசிவரும் சிலரும் இங்கு தான் இருக்கிறார்கள். லண்டனில் நாம் போராட்டம் நடத்தினால் வெள்ளைக்காரர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுபவர்களும் லண்டனில் தான் இருக்கிறார்கள். ஆனால் லண்டன் மிச்சம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், இவ்வாறு பேசித் திரியும் நபர்கள் சிலருக்கு விழுந்த சாட்டையடியாக உள்ளது. ஒரு 14 வடதுச் தமிழ்ச் சிறுவனின், மனத் துணிச்சல் இது ! எவ்வாறு இளைய தலைமுறையினர் தமது தேசத்தின் மேல் பற்றுதலாக உள்ளார்கள் என்பதும் இதில் இருந்து தெரிகிறது. கூடுதலாக சஸ்பென்ஸ் போடாமல் விடையத்துக்குச் செல்லலாம் வாருங்கள்.
லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள முன்னணிப் பாடசாலை நிகழ்வு அரங்கு ஒன்றில் பல நாட்டுக் கொடிகள் வைக்கப்பட்டுள்ளது. பல உலக நாடுகளின் கொடிகளுக்கு மத்தியில் இலங்கையின் சிங்கக் கொடியும் இங்கே வைக்கப்பட்டிருந்ததை அங்கே கல்வி பயிலும் தமிழ் மாணவன் ஒருவன் ஆட்சேபித்துள்ளான். தாம் இதனை ஏன் ஆட்சேபிப்பதாக ஒரு பெரும் கடிதத்தை எழுதிய இச் சிறுவன், இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை விவரித்துள்ளான். இத்தோடு புகைப்படங்களையும் இணைத்து தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளான். இவற்றைப் பார்வையிட்ட தலைமை ஆசிரியர், மிகவும் மன வேதனையடைந்து, அங்கிருந்த இலங்கைக் கொடியை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். இக் கொடியைப் பார்க்கும் போது தமிழ் சிறுவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனையும், வேதனையடைகிறார்கள் என்பதனையும் தாம் புரிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் கருதி, இச் சிறுவனின் பெயரையும், அவன் பயிலும் பள்ளிக்கூடத்தின் பெயரையும் நாம் இங்கே வெளியிடவில்லை. இதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு ஏன் ஏனைய தமிழ் இளையோர்கள் இவ்வாறு கொடிப் புறக்கணிப்பில் ஏன் ஈடுபடக் கூடாது ? சமீபத்தில் ரூட்டிங்கில் உள்ள பாடசாலை ஒன்றில் நவம்பர் மாதம் 27ம் திகதி காலை, அசம்பிளி நடந்தவேளை, அன்றைய தினம் அதனை முன் நின்று நடத்திய தமிழ் சிறுவன் ஒருவர், கொல்லப்பட்ட தமிழ் மக்களின் அஞ்சலி நிகழ்வு இன்று, அவர்களுக்காகவும் நாம் 1 நிமிடம் மெளனமாக நிற்ப்போம் என்று கூறியுள்ளார். அப் பள்ளி மாணவர்கள் அனைவரும் அன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். இலங்கையை விட்டு பல்லாயிரக் கணக்கான மைல் தொலைவில் நாம் வாழ்ந்தாலும் தமிழர் என்ற உணர்வு எம்மை விட்டுப் பிரியப்போவது இல்லை. அதிலும் இளையோர்கள் இப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்து வழி நடத்தவேண்டும். இதற்கு பெற்றோர்கள் தடைசொல்லாது இருக்கவேண்டும். புலம்பெயர் நாடுகளில், இளையோர்கள் பாதைமாறிச் செல்ல, மேற்கத்தைய பாணியில் அவர்கள் வளர்க்கப்படுவதே காரணமாக அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் கோவில், ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலையம், சனிக்கிழமை தமிழ் பள்ளிக்கூடம், என்று சென்று வரும் இளையோர்கள், பெரும்பாலும் நல்ல வழியில் நடத்தப்பட்டு வருவதாககவும், அவர்கள் தமிழ் கலாச்சாரங்களோடு இணைந்திருப்பதால், பிற கலாச்சாரப் பழக்கங்களை பின்பற்றுவது இல்லை என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அவர்களின் ஈடுபாடு பிழையான வழியில் செல்லாமல் இருக்கிறது. இதுவே ஈழத் தமிழர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க எதிர்காலத்தில் உதவியாக அமையும்

 
Leave a comment

Posted by on December 19, 2012 in புரட்சி