RSS

மழலை

ஒவ்வொரு சிணுங்கலும் ராகமே…
மழலையின் சினுங்கல்கள் மட்டுமே
பெற்றவர்களுக்கு
மிகவும் பிடிக்கும்,
தூக்கத்தை மட்டுமல்ல
எதையும் பிரிய துணிவார்கள்.
பல இசை மீட்டும் குட்டி தேவதைகள்
எத்தனை பாவனைகள்!
அழுகையும் அழகு தான்
சிரிப்பும் அழகு தான்
திகைப்பு அழகு தான்

இறைவன் இருக்கிறான் என்பதை
வெளிக்காட்டுகிறது பிஞ்சு முகம்

எத்தனை ராகங்கள்!
எங்கே கற்றனரோ இந்த இசையை
ராகதேவனே உங்களிடம் யாசிக்க
வேண்டும்
இசையை

Advertisements
 
8 Comments

Posted by on December 5, 2013 in கவிதைகள்

 

நொடிப்பொழுது……………..!

நண்பர் ஒருவர் பதித்த படம் ஒரு சிறிய காதல் கவிதையோடு. அதன் தாக்கமே, காதல் மரணம் குறித்த பதிப்பு…..தவறு இருப்பினும் தயவு செய்து சுட்டி காட்டுங்கள்…நன்றி

மேலும் பார்க்க »

 
4 Comments

Posted by on December 4, 2013 in கவிதைகள்

 

பிம்பம் கண்டேன்!!!

உன்னை பற்றி எழுத நினைத்தேன்
காதிதங்களும் கசப்பட்டன,
வெகுண்டேன்!

பேனா மை கூட
தீர்ந்து போனது,
கலங்கினேன்!

செய்வதறியாது வெறித்து
நின்றேன்,
என்னையே உறுக்கினேன்!

என் குருதியில் நனைந்தன
காகிதங்கள்,
மெழுகு போல நான் உருக
அவ்வெளிச்சத்தில் உன் உருவம்
அழகாக ஒளிர,
நான் கண்களை மூடினேன்
உன் உருவத்தை படம்பிடித்தபடியே!

நான் சுவாசிக்க தடுமாற,
அறையெங்கும் வழிந்தோடும் குருதி
சகதி போல்
என் மேனி எங்கும்
ஒட்டிக்கொண்டு,
உன் வாசத்தை எனக்களித்து
என் உயிரை பறித்தது!!!

 
1 Comment

Posted by on December 3, 2013 in கவிதைகள்

 

தனிமையிலே என் இதயம் துடிக்குதே [பாடல் வரிகள்]

படம்: இவன் வேற மாதிரி
இசை: சத்தியா. சி
பாடலாசிரியர்: விவேகா
பாடியவர்கள்: ஆனந்த் அரவிந்த்தக்க்ஷன், நிவாஸ்

தனிமையிலே
என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே
என் நிழலும் நடக்குதே
என் அருகே நீ இருந்தால்
இரவு பகல் தேவையில்லை

தனிமையிலே
என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே
என் நிழலும் நடக்குதே


வானிலவு ஏளனமாய்
எனைப்பாத்து சிரிக்கிறதே
ஊதுபத்தி போல் எனது
உயரம் இங்கே குறைகிறதே
ஆறுகளாய் விழி கலங்கும்
ஆறுதலாய் நீ இல்லையே
வேறு எதுவும் புரியாமல்
வேர் வரையில் உன் கனவே
என்னவளே
என் உலகம் உரையுதே
கண்களிலே
உன் கனவாய் நிறையுதே

பேச்சிருந்தும் மூச்சிருந்தும்
உயிரை மட்டும் காணவில்லை
நீ நடந்த சாலைகளில்
நடந்திடவே முடியவில்லை
ஏழுகடல் ஏழுமலை
தாண்டி உனை தேடிடுவேன்
காற்றிலெல்லாம் உன் பெயரை
எழுதி வைத்தே காத்திருப்பேன்
என் உயிரே
என் இதயம் துடிக்குதே
உயிர் விடுவேன்
நீ பிரிந்தால் நொடியிலே

 
 

எங்க போற மகனே [பாடல் வரிகள்]

பாடல்: எங்க போற மகனே
படம்: மதயானை கூட்டம்
பாடியவர்: தஞ்சை செல்வி
இசையமைப்பாளர்: என்.ஆர்.ரகுநந்தன்
பாடலாசிரியர்: ஏகாதசி

உணர்ச்சி மிகுந்த வரிகள். எளிய வார்த்தைகளாக இருந்தாலும் மனதை பாரமூட்டும். மகன், தன்னையும் கிராமத்தையும் பிரிந்து செல்லும் பொழுது, தாய் பாடும் உருக்கமான பாடல்.முழுக்க முழுக்க தமிழ் வார்த்தைகளை கோர்த்து தமிழ் மனம் வீசும் சோக பாடல்.

மேலும் பார்க்க »

 
 

நீயில்லாமல்………………..!

கோபமும் அழகு தான்
நீ
என்மீது கோபப்படும் பொழுது,
என்றும்
நீ கோபப்பட
நான் பார்த்து இரசிப்பேன்!

சிந்தும் கண்ணீரும் உனக்காக
என்றென்னும்
பொழுது
மகிழ்ச்சியாக இருக்கிறது!

அழகாக நீ சிரிக்கும்
பொழுது
உன்னை ஆயுள்
முழுவது
சிரிக்க வைக்க ஆசைப்படுகிறேன்!

உனக்காக நான்
என்றும் காத்திருக்கேன்
ஆனால் நீயில்லாமல்
தனித்திருக்க முடியாது!

என் பிள்ளையை சுமந்தாய்
என்னை இருளில் தள்ளினாய்
வழியில்லை எனக்கு!

உன் சொல்லை நான் என்றும்
தவிர்த்ததில்லை….!

ஆதலால்
உலகை பிரியாமல்

உன் நினைவை சுமக்கிறேன்
இறுதிவரை.

 
2 Comments

Posted by on December 2, 2013 in கவிதைகள்

 

கோண கொண்டைக்காரி [பாடல் வரிகள்]

பாடல்: கோணக்கொண்டைக்காரி குத்துற
படம்: மதயானை கூட்டம்
பாடியவர்: ஜி.வி. பிரகாஷ்
இசையமைப்பாளர்: என்.ஆர்.ரகுநந்தன்
பாடலாசிரியர்: ஏகாதசி

மேலும் பார்க்க »