RSS

Daily Archives: June 11, 2011

ஏனோ இன்று பாரமாய் இருக்கிறது (11-June-2011)

இது அனைவருக்கும் பொருந்துமா என்று எனக்கு தெரியவில்லை. என் மனம் மிகவும் வருத்தமாய் இருக்கிறது. நண்பர்களே கோபித்துக் கொள்ளவேண்டாம்……….

என்னுடைய அனுபவத்தை திருக்குறள் போல வடிவமைப்போம் என்று ஒரு சிந்தனை உருவானது. அது தான் கீழே எழுத்துக்களாய்:-

நட்பு அழகானதுதான் நண்பனுடன் பணம்
பரிமாற்றம் இல்லாத வரை.

நண்பன் அன்பானவணன் தான், அவன்
உன்னிடம் கடன்படாமல் இருக்கும்வரை.

கைகொடுப்பான் நண்பன், கொடுத்தேன்! கை
போனது தான் மிச்சம்.

சில நண்பர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு
நட்பை அகத்திலிருந்து நீக்கிவிடுமோ!

பல ஆண்டு பழக்கத்தை பணம்
பிரிக்கிறது சில நாட்களில்.

தினமும் தொடர்பிலிருக்கும் நண்பன், பணம்
பெற்றவுடன் தொடர்பில் இல்லை!

Advertisements
 
6 Comments

Posted by on June 11, 2011 in Uncategorized